world

சோலேடார் வீழ்ந்தது

மாஸ்கோ, ஜன.19- உக்ரைனின் நகரமான சோலேடார் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு தாக்குப் பிடிக்க  முடியாமல் வீழ்ந்தது என்று ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளரான இ கோர் கோனெசென்கோவ் அறிவித்துள்ளார். சோலேடார் நகர்தான் உக்ரைனின் தென் மேற்குப் பகுதியில் உள்ள ஆர்டியோமோஸ்க் உள்ளிட்ட பல பகுதிகளை இணைக்கும் நகர மாகும். இந்த நகரில் இருந்துதான் அந்தப் பகுதிகளுக்கு ஆயுதங்கள், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவை செல்ல வேண்டும். அங்குள்ள உக்ரைன் ராணுவத்திற்கு இது நெருக்கடியை உருவாக்கவிருக்கிறது. அவற்றை ரஷ்யப் படைகள் தடுப்பதோடு, முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த இது உதவப் போகிறது. இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் இகோர் கோனெசென்கோவ் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘எதிரிப் படைகளின் நிலை களின் மீது எங்கள் விமான, ஏவுகணைப் பிரிவு மற்றும் தரைப்படைகள் நடத்திய தொடர் தாக்கு தல்களால் இது சாத்தியமானது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 700 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். கைப்பற்றப் பட்டுள்ள நகருக்கு அருகில் 300 படைப்பிரிவு களுக்குச் சொந்தமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டன’’ என்று குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், ‘‘இதுவரையில் நடை பெற்ற தாக்குதல்களில் 372 விமானங்கள், 200 ஹெலிகாப்டர்கள், 400 ஏவுகணை அமைப்புகள் மற்றும் 7 ஆயிரத்து 495 பீரங்கி கள் உள்ளிட்ட ஆயுதந்தாங்கிய வாகனங்கள் ஆகியவை ரஷ்யாவின் தாக்குதல்களால் அழிக்கப்பட்டன’’ என்று தெரிவித்தார். பெரும் இழப்பை உக்ரைன் சந்தித்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், ஆயிரக்கணக்கான ராணுவ வாகனங்களையும் இழந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.