world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை  தாக்கி அழிக்கும் அதி நவீன லேசர் ஆயுதங்களை ரஷ்யா உக்ரைனில் பயன்படுத்துகிறது என துணை பிரதமர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார்.  
  2. பிரிட்டனில் 40 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி  மக்களை வதைக்கிறது. எனவே மக்கள் இலவச  வை-ஃபை இணைய வசதி/ விலை குறைந்த உணவு/ வெப்பம் ஆகியவற்றுக்காக மெக்னால்டு போன்ற விடுதிகளில் நீண்ட நேரம் செலவழிக்கின்ற னர் என கார்டியன் இதழ் கூறுகிறது.
  3. அமெரிக்க வங்கிகளில் உள்ள ரஷ்ய நிதியை எடுத்து  உக்ரைனுக்கு தருவது சட்ட விரோதம் என  அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன் தெரி வித்துள்ளார். பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் இணைவதை துருக்கி தடுத்து வருகிறது. அதே சமயம் இந்த தேச ங்கள் குர்தீஷ் போராளிகளுக்கு அடைக்கலம் தரு வதை தவிர்த்தால் தனது நிலையை துருக்கி  மாற்றிக் கொள்ளும் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
  4. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால்தான் இத்தாலி ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார போரில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகிறது எனவும்  இத்தாலி சுயேச்சையான நிலை எடுக்க வேண்டும் எனவும் முக்கிய ஊடகவியலாளர் மேட்டியோ கிராசிஸ் தெரிவித்துள்ளார்.
  5. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த காரணத் தால்தான் விலைவாசி உயர்வு  எனும் பைடன் கருத்து  தவறு என அமேசான் உரிமையாளர் ஜெஃப்  பெசோ சும், டெஸ்லா  உரிமையாளர் எலான் மஸ்க்கும் கூறி யுள்ளனர்.  
  6. இந்தியாவை ரஷ்யாவிடமிருந்து பிரிக்க அமெரிக்கா  கடும் முயற்சிகளை செய்து வருகிறது என பிலம்பர்க் எனும் ஊடகம் கூறுகிறது.
  7. ரஷ்யாவின் ரூபிள் மூலம் எண்ணெய் கொள்முதல் செய்யமாட்டோம் என கர்ஜித்த பல நாடுகள் திரை மறைவில் ரூபிள் கொடுத்து எண்ணெய் வாங்க முன்வந்துள்ளன. 1
  8. 000க்கும் அதிகமான உக்ரைன் படையினரும் நாஜிக்களும் மரியபோல் நகரில் ரஷ்யாவிடம் சரண் அடைந்துள்ளனர். ஆனால் இது உக்ரை னின் வெற்றி எனவும் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட தோல்வி  எனவும்  பி.பி.சி/ கார்டியன் போன்ற மேற்கத்திய ஊடகங்கள் வினோதமாக குறிப்பிடுகின்றன.
  9. பொய்யே! உனது இன்னொரு பெயர்தான் மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களா?
;