world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. ரஷ்ய எண்ணெய்க்கு ரூபிள் தராத காரணத்தால் பின்லாந்துக்கு எரிவாயு தருவதை ரஷ்யா நிறுத்திவிட்டது. மரியபோல் நகரில் ‘‘அசோவ்ஸ்டல்’’ எனும் இரும்பாலையில் பதுங்கியிருந்த அனைத்து 2,147 உக்ரைன்/நாஜி வீரர்களும் ரஷ்ய படையினரிடம் சரண் அடைந்தனர்.
  2. ஒரு வீரரையும் பலி தராமல் ரஷ்யா இதனை சாதித்து உள்ளது. இதன் மூலம் முழு மரியபோல் நகரமும் ரஷ்யாவின் கையில்! கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்கா பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்து உள்ளது. விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு தடை விதித்ததற்கு சர்வதேச டென்னிஸ் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
  3. உக்ரைன் மண்ணிலிருந்து ‘‘ரஷ்யா’’ எனும் வார்த்தையே துடைத்தெறியப்பட வேண்டும் என மீகாயில் பொடோலியக் எனும் தலைவர் கூறி யுள்ளார்.
  4. இவர் ரஷ்ய- உக்ரைன் பேச்சுவார்த்தை களில் பங்கேற்றவர். உக்ரைன் கட்டாய ராணுவப் பணியை செய்யாமல் ஏமாற்றி வெளி நாடுகளுக்கு தப்பி ஓடிய நபர்களின் குடியுரிமையை பறிக்க உக்ரைன் நாடாளு மன்றம் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.
  5. டாலரும் யுரோவும் மேற்கத்திய நாடுகளுக்கு அரசி யல் கருவிகளாக பயன்படுவதால் மாற்று நாணயங்க ளை வர்த்தகத்தில் பயன்படுத்துவதை ரஷ்யா ஊக்க மளிக்கும் என பிரதமர் மிகாயில் மிஷுஸ்டின் கூறி யுள்ளார்.
  6. ரஷ்ய எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் தடை விதிக்க அதனால் தேங்கிய எண்ணெய்யை சீனா வாங்கி குவித்து வருகிறது. நேட்டோவின் தளங்களை நிரந்தரமாக நிறுத்தி வைக்க தான் தயார் என போலந்து அறிவித்துள் ளது. கருநாகத்தை வீட்டிற்குள் வளர்ப்பது போல இது!
  7. உக்ரைனின் தென்பகுதியில் நூற்றுக்கணக்கான வீரர்கள் ரஷ்ய படையினரிடம் சரணடைந்து வருவ தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
;