world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. தடைகள் இருந்தாலும் பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து டன் கணக்கில் தங்கம் கொள் முதல் செய்துள்ளனர். தடையா? சுயநலமா? எனில் சுயநலம்தான் ஐரோப்பாவுக்கு முக்கியம் போலும்!
  2. ரஷ்ய எரிசக்திக்கு தடை இருப்பதால் குளிரிலிருந்து மக்களை காக்க எதை வேண்டுமானாலும் எரிப்போம் என செக் நாட்டின் அமைச்சர் பர்டுஸ்கா அறிவித்துள்ளார்.
  3. எனினும் ரஷ்யாவை சிதைக்கா மல் விடமாட்டோம் எனவும் கூறுகிறார். அமெரிக்காவில் எரிபொருள் விலை கடுமையான உயர்வுக்கு காரணம் புடின்தான் என ஜோ பைடன் ஓயாமல் கூறிவருகிறார். ஆனால், அமெரிக்க மக்க ளில் 11 சதவீதம்தான் புடின் காரணம் என நம்புவ தாக ராஸ்முஸேன் எனும் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் வெளிப்பட்டுள்ளது.
  4. உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்ப தற்கு பரவலான கருத்தொற்றுமை ஏற்பட்டுள் ளது என பிரான்சுக்கான ஐரோப்பிய அமைச்சர் கிளமண்ட் பியூனே தெரிவித்துள்ளார்.
  5. எனினும் சில நிபந்தனைகள் உண்டு எனவும் வெளிப்படுத்தி யுள்ளார். ஒரு ‘‘எரிசக்தி அவசர கால நிலையை’’ நோக்கி ஜெர்மனி ஆபத்தான முறையில் பயணித்துக் கொண் டுள்ளது என ‘‘டை வெல்ட்’’ எனும் ஊடகம் அபாயச் சங்கு ஊதியுள்ளது.
  6. தமது மக்களை காக்க ரஷ்யா மீதான தடையை நீக்க ஜெர்மனி முன்வருமா? முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டம் கொண்டு வரப்போவதாக கனடா வெளிப்படுத்தியுள்ளது. இதன் விளைவுகளை கனடா குறைத்து மதிப்பிடுகிறது என சிலர் விமர்ச னம் செய்துள்ளனர்.
  7. சுற்றுச் சூழலை பாதுகாக்க அனல் மின் நிலையங்க ளுக்கு போட்ட கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்த நெதர்லாந்து முடிவு! ரஷ்ய தடைகளின் இன்னொரு விளைவு!
  8. உக்ரைனுக்கு ஆதரவு தர நேட்டோ நாடுகள் தமது மக்களை அடிப்படை தேவைகளை கூட தியாகம் செய்ய சொல்கின்றனர். மக்கள் எத்தனை நாட்க ளுக்கு ஏற்றுக்கொள்வார்கள்?
  9. அமெரிக்காவை ஒரு உலகப்போருக்குள் சிக்க வைக்க பைடன் முயல்கிறார் என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
  10. டிரம்பின் முன்பு பைடன் மோசமான சர்வதேச தலைவர் ஆகிவிடுவார் போலும்!