world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. பணவீக்கமும் விலைவாசியும் ரஷ்யாவில் கட்டுக்குள் இருப்பதாகவும் எனினும் தடைகள் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ரஷ்ய மத்திய வங்கியின் தலைவர் எல்விரா நபியுல்லினா கூறி யுள்ளார்.
  2. சோவியத் ஒன்றியம் பிரிந்த பின்னர் உக்ரைன் உட்பட பல குடியரசுகளில் அமெரிக்கா உயிரி ஆயுதங்களை தயாரிக்கும் சோதனை கூடங்களை உருவாக்கியது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரவ் குற்றம்சாட்டியுள்ளார்.
  3. ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்க நினைத்த மேற்கத்திய நாடுகள் தம்மையும் படுகுழிக்குள் தள்ளிக்கொண்டுள்ளனர்  என முன்னாள் ரஷ்யா  ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் கூறியுள்ளார்.
  4. ஹங்கேரி தொடர்ந்து ரஷ்யா ஆதரவு நிலை எடுப்ப தால் உக்ரைன் வழியாக ஹங்கேரிக்கு செல்லும் ரஷ்ய  எண்ணெய்யை நிறுத்துவோம் என உக்ரைன் மிரட்டியுள்ளது. அமெரிக்காவின் மிரட்டல்களுக்கும் சாகசங்களுக் கும் அரேபியா நாடுகள் பயப்படாது என லவ்ரவ் கூறியுள்ளார்.
  5. மேற்கத்திய நாடுகள் தமது வலிமையை மிகைப் படுத்தி மதிப்பிடுகின்றன என புடின் கூறியுள்ளார்.
  6. “உண்மைக்கான  அமைச்சரவை” எனும் புதிய  பிரிவை உருவாக்கியுள்ள அமெரிக்கா, ரஷ்யா மீதும் ரஷ்ய பண்பாடு குறித்தும் கடும் பொய்களை பரப்பி வருகிறது என ஐ.நா.வுக்கான பிரதிநிதி பொலான்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
  7. உக்ரைன் போன்ற போர் உருவானால் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உள்ள ஆயுதங்கள் இரு வாரங்களுக்கு கூட போதாது என ஒன்றிய தலைவர்  ஜோசப் போரல் கூறியுள்ளார்.
  8. லிமன் என்ற முக்கிய நகரத்தை இழந்துவிட்டதாக உக்ரைன் ராணுவம் பகிரங்கமாக ஒத்துக்கொண்டு ள்ளது.
  9. கருங்கடலுடன் இணையும் அசோவ் கடல் எனும் நீர்வழி பகுதியை தமது கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டு வந்த ரஷ்யா அங்கிருந்த உக்ரைனின் அனைத்து கண்ணிவெடிகளையும் அகற்றி போக்கு வரத்துக்கு வழி வகுத்துள்ளது. இந்த கடல்பகுதி மூலமாகவே உக்ரைன் சர்வதேச போக்குவரத்தை நடத்த முடியும். ஆனால் அது தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில்!
;