மாஸ்கோ, ஆக.31- சோவியத் யூனியனின் முன்னாள் ஜனாதி பதியும், பல துண்டுகளாக அந்நாடு சிதறிப் போனதற்குக் காரணமானவருமான மைக் கேல் கோர்பச்சேவ் தனது 91-ஆவது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். 1985 முதல் 1991-ஆம் ஆண்டு வரையில் சோவியத் யூனியனின் ஜனாதிபதியாக இருந்த அவர், நீண்ட காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் உயிரிழந்தார். அமெரிக்காவுக்கும், சோவியத் யூனிய னுக்கும் இடையிலான பனிப்போரை முடி வுக்குக் கொண்டு வருவதாகக் கூறிய அவர், சோவியத் யூனியனைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். அரசு மற்றும் சோவியத் யூனியன் கம்யூ னிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த பல் வேறு துறைகளை சீர்திருத்தம் என்ற பெயரில் நிர்மூலமாக்குவதற்கு அடித்தளம் அமைத் தார். 1952-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி யின் உறுப்பினரான கோர்பச்சேவ், 1985-ஆம் ஆண்டில் அக்கட்சியின் பொதுச் செயலாள ராக தேர்வு செய்யப்பட்டார். சோவியத் யூனி யனின் உச்சபட்சத் தலைவராக சர்வதேச சமூ கத்தில் வலம் வந்து கொண்டிருந்த இவர், சர்ச்சைக்குரியவராக மாறினார்.
தங்களுக்குச் சாதகமாக சோவியத் யூனி யனின் ஜனாதிபதியே செயல்பட்டதால் கோர்பச்சேவுக்கு மேற்கத்திய நாடுகள் புகழாரம் சூட்டின. 1990-ஆம் ஆண்டில் அவ ருக்கு நோபல் பரிசும் வழங்கின. அனைத்துத் துறைகளிலும் வலதுசாரி நாடுகளை விட ஒரு படி மேலே நின்ற சோவியத் யூனியன் சிதைந்து போனதைப் பார்த்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் களிப்படைந் தன. ஆனால், சோவியத் யூனியன் பல நாடு களாகப் பிரிந்தபிறகு, கோர்பசேவை அமெ ரிக்கா உள்ளிட்ட எந்த மேற்கத்திய நாடும் கண்டு கொள்ளவில்லை. கோர்பச்சேவின் மரணத்திற்கு, தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடி மிர் புடின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் உள்ள நோவோடெவிச்சி சமாதியில் அவரு டைய உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. 1999 இல் இறந்த அவரது மனைவி ரைசா வின் கல்லறை அருகே மாஸ்கோவில் உள்ள நோவோடெவிச்சி கல்லறையில் அடக்கம் செய்யப்படுவார். கோர்பச்சேவ் மார்ச் 2, 1931 அன்று இப்போது ரஷ்யாவின் ஒரு பகுதியான பிரி வோலியில் பிறந்தார். அவர் 1952 இல் மாஸ்கோ மாநில பல்க லைக்கழகத்தில் சட்டம் படிக்கத் தொடங்கிய போது அதிகாரப்பூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சி யில் சேர்ந்தார். 1955 இல் சட்டப் பட்டம் பெற்றார். 1970 இல், கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பிராந்திய செயலாளராக ஆனார். 1971 இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரானார். 1978இல் கட்சியின் விவசாய அணி செயலாளர் ஆனார். 1979 இல் அரசியல் தலைமைக்குழுவின் நியமன உறுப்பினரானார். 1980இல் முழு உறுப்பினரானார்.