world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. மரியபோல் இரும்பாலையில் சரண் அடைந்த உக்ரைன் ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் தமது உடலில் நாஜிக்களின் அடையாளங்களை பச்சை குத்தியிருந்தனர் என ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 1,20,000 ஆக இருந்தது எனவும் கட்டாய ராணுவ  பணி ஆணைக்கு பிறகு 7,00,000 ஆக உயர்ந்துள் ளது எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
  2. அமெரிக்காவின் 963 அரசியல்வாதிகள் மற்றும்  பிரபலங்கள் ரஷ்யாவில் நுழைய தடைவிதிக்கப் பட்டுள்ளது. அரசின் அனுமதி பெற்ற பின்னர்தான் மரிய போலில் உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்தனர் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ஆனால் இரு  நாட்களுக்கு முன்பு தமது கடமையை முடித்து விட்ட காரணத்தால் அவர்களை உக்ரைன் இராணு வம் மற்றும் உளவுத்துறை மீட்டனர் என அவர் கூறி யிருந்தார்.  
  3. மேற்கத்திய ஊடகங்களும் மரியபோல் நகரில் ரஷ்யாவுக்கு பின்னடைவு என பிம்பம் உருவாக்க முயன்றனர். உண்மை எத்தனை நாளுக்குதான் மறைந்திருக்கும்? உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர இத்தாலி 4 அம்ச திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தி டம் சமர்ப்பித்துள்ளது.
  4. போர் வெறியில்  திளைக்கும் அமெரிக்கா இதனை ஏற்றுக்கொள்ளுமா என்பது தான் கேள்வி! மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு பின்னரும் ரஷ்யா இந்த ஆண்டு எண்ணெய் விற்பனை மூலம்  100 பில்லியன் டாலர்கள் வருமானம்ஈட்டியுள்ளது.
  5. உக்ரைன் போர் முனைக்கு சென்று தாயகம் திரும்பிய ஒரு பிரான்சு வீரர் பிரான்சு உட்பட பல  தேசங்கள் உக்ரைனுக்கு தரும் ஆயுதங்கள் நாஜிக்களின் கைகளுக்கு செல்கிறது என்பதை ஏன்  உணர மறுக்கின்றனர் என கேள்விஎழுப்பியுள்ளார்.
  6. உக்ரைனுக்கு ஆயுதங்கள் தருவதையும் ராணு வத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதை கண்டித்து  ஏராளமான தொழிற்சங்க ஊழியர்கள் இத்தாலி யில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக சில   ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பணவீக்கம்: எஸ்தோனியா-19%; லிதுவேனியா-16.8%; பல்கேரியா-14.4%; செக் குடியரசு-14.2%; ருமேனியா-13.8%; லத்திவியா-13%; போலந்து- 12.4%
;