world

img

மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்

மாலே, ஏப். 22- ஞாயிறன்று நடைபெற்ற மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி முகமது  முய்சுவின்  மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி பெரும் பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.   2023ஆம் ஆண்டு மாலத்தீவு ஜனாதிபதியாக தேர்வான முய்சு, இந்திய ராணுவ வீரர்களை தீவில் இருந்து வெளியேற்றினார்.

அதற்கு மாலத்தீவு எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்ததுடன் முய்சு சீன சார்பு நிலையில் இருக்கிறார் என விமர்சித்து வந்தனர். முய்சு மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுக்கத் துவங்கினர். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என  கூறி வந்த நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தல் முக்கியமான தேர்தலாக இந்தியா மற்றும் சீனா தரப்பில் பார்க்கப்பட்டு வந்தது.

 அந்நாட்டின் மொத்தம் உள்ள 93 தொகுதிகளில் ஞாயிற்று கிழமையன்று வாக்குப்பதிவு நடைபெற்று அன்று மாலையே 86 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.   பெரும்பான்மைக்கு 47 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி 66 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை  வகிப்பதாக மாலத்தீவு நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

;