இந்தியா, சீனா குடிமக்கள் விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மலேசியாவிற்குச் செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய நடைமுறை அறிமுகம் செய்வதாக அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அதன்படி, தாய்லாந்து, இலங்கையைத் தொடர்ந்து இந்தியா மற்றும் சீனாவிலிருந்து மலேசியாவுக்கு செல்ல விசா தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும், விசா இன்றி 30 நாட்கள் தங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.