world

img

பிரேசில் விமான விபத்தில்  2பேர் பலி - 14 பேர் படுகாயம்

பிரேசிலில் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பிரேசிலின் போயிடுவா நகரில் செயல்பட்டு வரும் ஸ்கைடைவ் சுற்றுலா நிறுவனத்திற்கு சொந்தமான இலகுரக விமானம் ஒன்று புதனன்று விபத்துக்குள்ளானது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 
50 ஆண்டுகால ஸ்கைடிவிங் வரலாற்றில் தேசிய ஸ்கைடிவிங் மையத்தில் நடந்த முதல் விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.