world

img

கோவிட் தடுப்பூசிகளை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனிகா!

உலகம் முழுவதும் தங்களது Vaxzevria கோவிட் தடுப்பூசிகளை திரும்பப் பெறுவதாக பிரிட்டன் மருந்து நிறுவனம் அஸ்ட்ராஜெனிகா அறிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று நெருக்கடியின்போது அஸ்ட்ராஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 பாதிப்புக்கு தடுப்பூசியை உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்தது. 
அண்மையில், அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசியால் மிகவும் அரிதான சூழல்களில் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என அந்நிறுவனம் பிரட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், உலகம் முழுவதும் தங்களது Vaxzevria கோவிட் தடுப்பூசிகளை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா அறிவித்துள்ளது.
புதிய வகை கோவிட் வைரஸ்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய தடுப்பூசிகள் அதிகளவில் சந்தையில் உள்ளதால் Vaxzevria தடுப்பூசிக்கான தேவை எழவில்லை என்றும், வணிக காரணங்களுக்காக சர்வதேச சந்தைகளில் இருந்து இந்த தடுப்பூசியை திரும்பப் பெறுவதாகவும் அஸ்ட்ராஜெனிகா விளக்கமளித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசிகளின் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஏற்கனவே நிறுத்திவிட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

;