world

img

ஒமிக்ரானை விட வேகமாக பரவும் புதிய வகை வைரஸ்  

ஒமிக்ரான் வகை கொரோனாவை விட வேகமாக பரவும் புதியவகை மாறுபட்ட வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, ஒமைக்ரான் வகையின் துணை திரிபான பிஏ.2வை விட புதிதாக உருவாகியுள்ள எக்ஸ்இ கொரோனா 10 சதவீதம் அதி வேகமாக பரவலாம். ஒரு நோயாளி கொரோனா வைரசின் பல்வேறு வகைகளால் பாதிக்கப்படும்போது இதுபோன்ற பிறழ்வுகள் வெளிப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  

பிஏ.2வை விட புதிதாக உருவாகியுள்ள எக்ஸ்இ கொரோனாவின் வளர்ச்சி விகிதம் 10 சதவிகிதம் அதிகம் என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

கடந்த ஜனவரி 19 ஆம் தேதி, எக்ஸ்இ வகை கொரோனா முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை, 637 பேர் புதிய வகை பாதிப்பு உருவாகியுள்ளதாக என பிரிட்டன் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

;