world

img

பிரான்ஸ் : சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடரும்

கடந்த சில மாதங்களாக பிரான்ஸில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடரும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை, மூன்றாம் அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரான்ஸில் 35,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கும் தொடரும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரான்ஸ் அரசு கூறியதாவது :
“கொரோனா மூன்றாவது அலை அதிகரித்து வருகிறது. எனவே, சில கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கும். பள்ளிகள், வணிகங்கள், நிறுவனங்கள் ஆகியவை இயங்கலாம். மக்கள் பொதுவெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவர். பாதிப்பு அதிகமாக உள்ள பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்குச் செல்ல நினைப்பவர்கள் அதற்குத் தகுந்த வலுவான காரணத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
 

;