பெய்ரூட்/காசா, அக்.01- ஹிஸ்புல்லா, ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீன ஆதரவு குழுக்களின் முக்கிய அரசியல் தலை வர்கள், ராணுவ கமாண்டர்களை கொலை செய்து வந்த இஸ்ரேல் ராணுவம் தற்போது பாலஸ்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் தலை வர்களையும் படுகொலை செய்துள்ளது
அமைப்பின் மூளையாக செயல்படும் அரசி யல் தலைவர்களையும், ராணுவ கமாண்டர்களை யும் கொலை செய்துவிட்டால், பிறகு தலைமையற்ற ராணுவத்தை வீழ்த்தி விடலாம் என இஸ்ரேல் ராணுவம் இத்தகைய தொடர் படுகொலைகளில் ஈடுபட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை லெபனான் மீது நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பை தோற்றுவித்தவர்களுள் ஒருவரும், 2006 ஆம் ஆண்டு இஸ்ரேலுடனான போரில் ராணுவ கமாண்டராக பணியாற்றியவரும் தற்போதைய துணைத் தலைவருமான நபில் கவுக்கை இஸ் ரேல் படுகொலை செய்தது. இவர் சமீபத்திய வாரத்தில் இஸ்ரேல் படுகொலை செய்த 7 ஆவது ஹிஸ் புல்லா தலைவராவார்.
அதே போல் நஸ்ரல்லா படுகொலை செய்யப் பட்ட அன்றே ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த ராணுவ கமாண்டரான அலி கராக்கியும் கொலையா னதை அவ்வமைப்பினர் உறுதி செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து திங்கள் கிழமை அதி காலை லெபனான் தலைநகரில் ஹமாஸ் அமைப் பின் மூன்று தலைவர்களை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளதை ஞாயிற்றுக்கிழமை யன்று ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் தலைவரான ஃபதேஹ் ஷெரிப் அபு எல்-அமீன், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரையும் இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது. அதேபோல லெபனானில் உள்ள கோலா மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் (PFLP) அமைப்பின் மூன்று தலைவர்கள் கொல்லப் பட்டுள்ளனர்.
ஏமனின் ஹொடைடா துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்த தாகவும் ஹவுதி அமைப்பும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பாலஸ்தீன ஆதரவு தலைவர்க ளை படுகொலை செய்வதற்காக தாக்குதல் என்ற பெயரில் இஸ்ரேல் ராணுவம் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களையும் படுகொலை செய்துள்ளது. லெபனானில் நடத்தப்பட்டு வரும் இரண்டு வார தாக்குதலில் இதுவரை 1000 பேர் இஸ்ரேலால் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். 6000 க்கும் அதிக மான மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனை யில் உள்ளனர் என லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த கொலைகள் குறித்து இஸ்ரேல் ராணுவம் எந்த கருத்தையும் கூறவில்லை.
இஸ்ரேல் படுகொலை செய்த 7 முக்கிய ஹிஸ்புல்லா தலைவர்கள்
1. ஹசன் நஸ்ரல்லா, ஹிஸ்புல்லா தலைவர்
2. நபில் கவுக், ஹிஸ்புல்லா துணைத்தலைவர்
3. இப்ராகிம் கொபெய்சி, ஏவுகணை படைப்பிரிவு தலைவர்
4. முகமது சுரூர், டிரோன் படைப் பிரிவு தலைவர்
5. அலி கராகி, தெற்கு படைப்பிரிவுத் தலைவர்
6. அஹமத் வெஹ்பே, ரட்வன் சிறப்பு படைப்பிரிவு கமாண்டர்
7. இப்ராகிம் அகில், ரட்வன் எலைட் படைப்பிரிவு தலைவர்