கான் யூனிஸ்,ஏப்.21- காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனை வளா கத்தில் இருந்து 50 பாலஸ் தீனியர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாலஸ்தீனத்தின் மீதான போரில் இஸ்ரேல் ராணுவம் பல பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மீது குண்டுவீசியும் நேரடியாகவும் தாக்குதலை நடத்தி வருகிறது. கான் யூனிஸ் நகரில் இருந்த நாசர் மருத்துவ மனையின் மீது தாக்குதலை நடத்தி கைப்பற்றிய இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்த பாலஸ்தீனர்களை கொலை செய்து மண்ணில் புதைத்த தாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கிருந்து 50 பாலஸ்தீனர் களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.