world

சீன உதவிக்கு பாகிஸ்தான் நன்றி!

பாகிஸ்தான் பிரதமர் முகம்மது ஷபாஸ் ஷெரீப் 30ஆம் நாள் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள பிரதமர் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், வெள்ள நிவாரணம் மற்றும் பேரிடர் நிவாரணத்திற்கான சீனா செய்த மனித நேய உதவிகளுக்குப் பாகிஸ்தான் நன்றி தெரிவிக்கின்றது என்றார். மீட்பு மற்றும் பேரிடர் நிவாரணம் தற்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியப் பணியாகும். பேரிடருக்கு பிந்தைய புனரமைப்பு மற்றும் பாதி க்கப்பட்ட மக்களை மீட்பதற்குக் குறைந்தது 1000 கோடி அமெரிக்க டாலர் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்குச் சர்வதேச சமூகம் தொடர்ந்து உதவிகளை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். ஜூன் நடுப்பகுதியில் இருந்து, பாகி ஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பல்வேறு பேரழிவுகளில் 1,136 பேர் உயிரி ழந்தனர். 3 கோடியே 30 இலட்சத்து 40  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 30ஆம் நாள் தெரிவித்தது. முதலில் உதவிய நாடு வெள்ள நிவாரணம் மற்றும் பேரிடர் நிவாரணத்திற்காகப் பாகிஸ்தானுக்கு, சீனா  அளித்த மனித நேய பொருட்களுடன் சீன விமானப்படையின் Y-20 போக்குவரத்து விமானம், கராச்சி நகரை 30ஆம் நாள் அடைந்தது. கராச்சி நகரிலுள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒப்படைப்பு விழாவில் பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் நோங் ரோங் கூறுகையில், சீனாவும் பாகிஸ்தானும் பரஸ்பர உதவி செய்து, இன்னல்களைக் கூட்டாக எதிர்கொண்டு வருகின்றன. இந்த உதவிக்குப் பிறகு, பாகிஸ்தானுக்குச் சீனா தொடர்ந்து உதவி செய்யும் என்றார். பாகிஸ்தான் அரசின் சார்பாக, பாகிஸ்தானின் மின்சாரத் துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகிர் கான் இந்த விழாவில் கூறுகையில், பாகிஸ்தானுக்கு உதவி செய்த முதலாவது நாடு சீனா ஆகும். இரு நாட்டு மக்களின் தலைமுறை நட்பு றவை இது முழுமையாகக் காட்டுகின்றது என்றார்.