world

img

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் அறிவிப்பு!

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை நேபாளம் இன்று அறிவித்துள்ளது.

உலகின் மிக உயா்ந்த மலையான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை 1954ஆம் ஆண்டு இந்திய நில அளவைத் துறை அளவிட்டது . அப்போது அந்த சிகரத்தின் உயரம் 8,848 மீட்டா் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று விவாதம் எழுந்தது.

இதனைத் தொடா்ந்து எவரெஸ்டின் உயரத்தை அளவிட்டு மறுமதிப்பீடு செய்யும் பணியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் நேபாளம் தொடங்கியது.

இந்த பணி தற்போது நிறைவு பெற்று மறுமதிப்பீடு செய்யப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848.86 மீட்டர் என நேபாளம் இன்று (செவ்வாய்க்கிழமை)  அறிவித்துள்ளது.

;