ஆம்ஸ்டர்டாம்,டிச.4- நெதர்லாந்து அரசாங்கம் இஸ்ரேலுக்கு எப்-35 போர் விமான பாகங்களை ஏற்றுமதி செய்வ தன் மூலம் இனப்படுகொலைக்கு உடந்தையா கச் செல்கிறது என மனித உரிமைகள் அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளன.
ஹமாஸ் குழுவினரை தாக்குவதாகக் கூறி பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தொடர்ந்து சர்வதேச விதிமுறைகளை மீறி வருகிறது. இந்நிலையில் நெதர்லாந்து மனித உரிமை அமைப்புகள் நெதர்லாந்து அரசின் இந்த இனப்படுகொலைக்கு ஆதரவான செயல் பாட்டை கண்டித்து வழக்கு தொடுத்துள்ளன. இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன மக்களை, திட்டமிட்டு வேண்டுமென்றே தாக்கியுள்ளது. பொதுமக்களையும் ராணுவ இலக்குகளையும் இஸ்ரேல் ராணுவம் வேறுபடுத்தியது இல்லை என மறைந்த இஸ்ரேல் ராணுவ ஆய்வாளர் ஜீவ் ஷிஃப் தெரிவித்திருந்தார். நெதர்லாந்தில் உள்ள ராணுவக் கிடங்கில் அமெரிக்காவிற்கு சொந்த மான எப்-35 போர் விமான பாகங்கள் சேமித்து வைக்கப்பட்டு இஸ்ரேலுக்கு அனுப்பப் பட இருக்கின்றன. அதற்கான ஆவணங்களை அர சாங்கமும் வெளியிட்டுள்ளது.
நெதர்லாந்து மனித உரிமை அமைப்புகள், நீதி மன்றத்தில் தொடுத்துள்ள இந்த வழக்கில் இரு தரப்பு வாதத்தையும் கேட்ட பிறகு இரண்டு வாரங் களில் தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.