world

img

வெனிசுலா : சீன உதவியுடன் விண்வெளி துறையில் பங்கேற்பு

காரகஸ், மே 17- தங்கள் நாட்டு இளைஞர்கள் மத்தியில் அறிவியல் ஆய்வுகளுக்கான பயிற்சியை ஊக்கு விக்க தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா அரசு முடிவு செய்திருக்கிறது. 1999 ஆம் ஆண்டில் வெனிசுலாவில் பொறுப்பேற்ற ஹியூகோ சாவேஸ் தலைமை யிலான அரசு, அறிவியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் தர முடிவு செய்தது. ஏற்கனவே  அறிவியல் ஆய்வு மற்றும் தொழில்நுட்பங் களில் முன்னேற்றம் கண்டுள்ள நாடுகளோடு உடன்பாடு காண்பதில் சாவேஸ் ஆர்வம் காட்டினார். சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் நல்ல பலன்களைத் தந்தன. அரசியல் மாற்றங் களால் ஆய்வுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டா லும், நிகோலஸ் மதுரோ தலைமையிலான அரசு தனது அரசியல் உறுதியைக் காட்டி வருகிறது. வெனிசுலா அரசு புதிய பாய்ச்சல் வேகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. அறிவியல்  மற்றும் தொழில்நுட்பத் துறையைப் பலப்படுத்தி யிருக்கிறார்கள். அதற்கான நிதி ஒதுக்கீடு அதி கரித்துள்ளது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த வர்களுக்கு அறிவியல் ஆய்வு மற்றும் பயிற்சி மையத்தை உருவாக்குகிறார்கள். தங்கள் பணியிடங்களில் புதிய தொழில்நுட்பத்தை உரு வாக்குவது மற்றும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களைக் கையாளுவது ஆகியவற்றிற்கு தொழிலாளர்களைப் பழக்கப்படுத்த முடிவெடுத்திருக்கின்றனர். கல்வித்துறையில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சோசலிசப் பயிற்சி மற்றும் கல்விக்கான தேசிய கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் இளைஞர்கள், வேதியியல் தொழில்நுட்பத்திற்கான தேசிய  மையத்திற்கு அடிக்கடி அழைத்துச் செல்லப்படு கிறார்கள். தலைநகர் காரகசில் அமைந்துள்ள பல ஆலைகளுக்கு செல்லும் அவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்கின்ற னர். அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்ய அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.  வேதியியல் தொழில்நுட்பத்திற்கான தேசிய மையத்தில் நடைபெறும் பல்வேறு அறிவியல் ஆய்வுகள் பற்றி மாணவர்களுக்கு விளக்குகின்றனர். எண்ணெய் வளத்துறையின் தன்மைகள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்வ தோடு, எண்ணெய் வளத்தை எடுப்பது, சுத்தி கரிப்பது ஆகியவற்றில் அண்மைக்காலத் தொழில் நுட்ப வளர்ச்சியை எடுத்துரைக்கிறார்கள். அறிவியல் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றின் மூலமாக நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும் என்று வெனிசுலாவின் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். 

விண்வெளி ஆய்வுக்கு அழைப்பு

வெனிசுலாவில் அறிவியல் ஆய்வுப் பயிற்சிகளை அளிக்க சீனா முன்வந்திருக் கிறது. தொழில்நுட்பங்களை உருவாக்கு வதில் வெனிசுலாவின் விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பயிற்சிகளைத் தர சீனாவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக் கிறார்கள். சீனாவின் அறிவியல் ஆய்வுப் பிரதிநிதிகளைச் சந்தித்த வெனிசுலாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் காப்ரியலா ஜிமெனெஸ், “விண்வெளி ஆய்வில்  இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த முடிவு செய்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டார். வெனிசுலாவில் ஹியூகோ சாவேஸ் ஜனாதிபதியாக இருந்தபோதே சீனாவுடன் விண்வெளி ஆய்வு உள்ளிட்ட பல்வேறு அறி வியல் ஆய்வுகள் குறித்த இருதரப்பு உறவுகள் தொடங்கிவிட்டன. விண்வெளியில் தனியாக சீனா அமைத்து வரும் ஆய்வு மையத்திலும் தனது பங்கை செலுத்துமாறு வெனிசுலாவிடம் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பங்களில் பெரும் முன்னேற்றத் தைக் காண சீனாவுடனான உறவு மற்றும் அவர் களிடமிருந்து கிடைக்கவிருக்கும் பயிற்சிகள் பெரும் பங்களிக்கும் என்று வெனிசுலா அரசு கூறியுள்ளது.