world

img

பெரும் ஆபத்தை உணர்த்தும் நேட்டோ நடவடிக்கைகள்

பெய்ஜிங், ஜுன் 01 - ஆசிய பசிபிக் பகுதியில் அமெரிக்கா தலை மையிலான நேட்டோ படைகளின் நடவடிக்கை கள் ஆபத்திற்கான அறிகுறிகளாகத் தெரி கின்றன என்று சிஜிடிஎன் என்ற ஊடகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்த ஆய்வை மேற்கொண்டபோது, அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ராணு வக் கூட்டணி என்று பலரும் நேட்டோ பற்றிக் கருத்து சொல்லியிருக்கிறார்கள். ஆசிய பசிபிக் பகுதி களில் இந்த ராணுவக் கூட்டணி எந்தவித நட வடிக்கைகளிலும் ஈடுபடுவதை ஆய்வில்  பங்கேற்ற 90 விழுக்காட்டினர் எதிர்த்திருக் கிறார்கள். தங்களின் நடவடிக்கைகளுக்கு அவர்கள் எத்தகைய காரணங்களை சொல்லி வந்தார்களோ, அவைகள் அனைத்தும் தற்போதைய நடவடிக்கைகளுக்கு பொருந்தவே இல்லை என்று 93 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே, சர்வதேச அளவில் எழும் பிரச்சனைகளில் அமெரிக்காவின் முடிவையே அதன் கூட்டாளிகள் தங்கள் முடிவாக வும் அறிவித்து வந்திருக்கிறார்கள்.

உக்ரைன்  நெருக்கடியிலும் அப்படிப்பட்ட நிலைபாட்டையே எடுத்துள்ளனர். தங்கள் நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நாட்டு மக்களுக்கு நெருக்கடி என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் உக்ரைனுக்கு ஆதர வாக ரஷ்யா மீது பல்வேறு தடைகளைப் போட்டி ருக்கிறார்கள். அடுத்த கட்டமாக ஆசிய பசிபிக் பகுதிகளிலும் அமெரிக்கா சொல்லும் பணி களைச் செய்ய நேட்டோ கூட்டாளிகள் தயா ராகி வருகிறார்கள். இதில் முதல் கட்டமாக, ஜப்பானில் நேட்டோ அலுவலகம் ஒன்றைத் திறக்கப் போகிறார்கள். இந்தத் தகவலை அந்நாட்டின் பிரதமர் ஃபுமி யோ கிஷிடா தெரிவித்த பிறகுதான் மக்கள் மத்தியில் ஆய்வு நடத்தப்பட்டது. அவரது அறிவிப்பு பெரும் கவலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஜப்பானில் மட்டுமல்ல, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இதன் தாக்கம் இருந்தது. இத்தகைய செயல்பாடுகள் இந்தப் பகுதியின் அமைதியைக் குலைத்துவிடும் என்ற கருத்து எழுந்தது. நேட்டோ ராணுவக் கூட்டணியின்  பிரதிநிதிக் குழு ஒன்று ஜப்பானுக்கு வந்தது. கூட்டணிக்கும், ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்கான வழிகளை ஆய்வு செய்திருக்கிறார்கள். அதில்தான் டோக்கி யோவில் ஒரு அலுவலகத்தைத் திறப்பது தொடர்பாகப் பேசியுள்ளனர். அடுத்த ஆண்டில் இந்த அலுவலகத்தைத் திறக்கலாம் என்ற ஆலோ சனையும் முன்வைக்கப்பட்டது. இதை நேட்டோ வும், ஜப்பானும் உறுதி செய்துள்ளன. இந்த அலுவலகம் திறக்கப்பட்டால் ஆசிய-பசிபிக் பகுதியில் அமைக்கப்படும் முதல் நேட்டோ அலுவலகமாக அது இருக்கும்.

சீனா, வடகொரியா எதிர்ப்பு

சீனாவும், வடகொரியாவும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் நேட்டோ செயல்படுவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வடகொரியாவின் ஜப்பான் ஆய்வு மையத்தின் அலுவலர்களில் ஒரு வரான கிம் சியோய்-ஹுவா, “ராணுவக் கூட்டணி ஒன்றை ஆசிய-பசிபிக் பகுதியில் அமைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்று அனை வருக்கும் தெரிந்த ரகசியமாகும். அண்மைக் காலத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவுக்கும், ஜப்பானுக்கும் இடையில் ஒத்துழைப்பு அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது” என்று கூறியுள்ளார். “ஆசிய-பசிபிக் பகுதிக்குள் கிழக்கு நோக்கிய நேட்டோவின் பயணம் பிராந்தியப் பிரச்சனை களில் தலையீட்டை உருவாக்கும். இது பிராந்திய அமைதியைக் குலைத்துவிடும். இந்தப் பகுதி நாடுகளுக்குள் முகாம்களை உருவாக்கும். இந்தப் பகுதியில் இதுபோன்ற ராணுவக் கூட்டணி அமைவதைத் தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது “ என்று சீனா தெரிவித்துள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.
 

;