world

img

தெற்கு சீனாவில் கனமழை காரணமாக 15 பேர் பலி  

தெற்கு சீனாவில் பெய்து வரும் கனமழையால் 15 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.  

சீனாவில் உள்ள கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள புஜியான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் சுமார் 8 பேர் உயிரிழந்தனர். சீனாவில் உள்ள முக்கிய நகரமான யுனான் மாகாணத்தில் இதுவரை 5 பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர்.  

குவாங்சி பகுதியில் உள்ள ஜின்செங் நாட்டில் வெள்ளிக்கிழமை மூன்று குழந்தைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும்,  2 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் புஜியான் மாகாணத்தில் இடிந்து விழுந்த தொழிற்சாலை கட்டிடத்தில் சிக்கி 5 பேர் பலியானதாகவும், 3 பேர் குடியிருப்பு கட்டிடத்தில் சிக்கிக்கொண்டதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த புயல் மழையால் அங்குள்ள வீடுகள் முற்றிலும்  சேதமடைந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து மழையில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புப்டையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

;