world

img

சாம்பியா, இலங்கைக்கு சீன தடுப்பூசிகள்...

சீன அரசு வழங்கிய புதிய ரக கொரோனா வைரஸ்தடுப்பூசிகள் ஆகஸ்டு 7ஆம் நாள் சாம்பியாவைச் சென்றடைந்தன. தடுப்பூசி போடும் பணியில் சாம்பிய அரசு  முன்னேறி வருகின்றது. சீனா வழங்கிய இத்தொகுதி தடுப்பூசிகள்சாம்பியாவுக்குத் தொற்றுநோயை எதிர்த்துப் போராடஉதவியளிக்கும் என்று அந்நாட்டுக்கான சீனத் தூதர் லி ஜீநம்பிக்கை தெரிவித்தார். சீன அரசு வழங்கிய தடுப்பூசிகளுக்குச்சாம்பியாவின் சுகாதார அமைச்சகத்தின் நிரந்தரச் செயலாளர் கென்னடி மலாமா நன்றி தெரிவித்தார். சாம்பியாவுக்கு சர்வதேச சமூகத்தின் தடுப்பூசி உதவி அவசரமாகத் தேவைப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை
சீனா வழங்கிய புதிய தொகுதி சைனோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை பெற்றுக் கொண்டது. இலங்கையில் பெரும் அளவில் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சூழலில் சைனோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையைச் சென்றடைந்துள்ளது தடுப்பூசி செலுத்தும் பணியைத் துரிதப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.கொரோனா பரவலின் மூன்றாவது அலையின் தாக்கத்தில் இலங்கை உள்ளது. கடந்த 10 நாள்களில் மட்டும் 500க்கு அதிகமானோர் இத்தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர்.இலங்கையில் 1 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றும் இதில், 87 லட்சம் தடுப்பூசிகள் சைனோபார்ம் நிறுவனத்தைச் சேர்ந்தவை. தவிரவும், ஸ்புட்னிக், ஃபைசர், ஆஸ்ட்ராசெனிகா, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன என்றும்சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

;