world

img

அறிவியல் ஆராய்ச்சியில் அமெ.வை பின்னுக்குத் தள்ளியது சீனா

சீனாவின் ஆராய்ச்சிகளை இத்தனை ஆண்டுகாலம் அமெரிக்கா இருட்டடிப்புச் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிகளவு ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிப்பது ஆராய்ச்சிகளில் மேற்கோள் காட்டப்படுவது என பல  ஆண்டுகளாக தரவரிசையில் அமெரிக்கா கோலோச்சி வந்தது. ஒரு நாட்டின் ஆராய்ச்சியாளர் களால் வெளியிடப்படும் அதிகள விலான ஆராய்ச்சிக் கட்டுரைகள் நோபல் பரிசை பெற்றுக் கொடுத்து விடாது. ஆனால் அது அந்த நாடு ஆராய்ச்சித் துறையில் எந்த அளவிற்கு கோலோச்சுகிறது என்பதை காட்டும். அறிவியலாளர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடுவதற்கு அதன்  தரத்தை பொறுத்து விதிகள் வகுத்துள்ள னர். அமெரிக்காவே இதுநாள் வரை பிற நாடுகளை வழிநடத்தி வந்தது.ஆனால் தற்போது அமெரிக்காவிடம் இருந்து அந்த இடம் நழுவி வருகிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக சீனா மற்றும் சீனாவைச் சார்ந்த கல்வி நிறுவனங்களில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவை விட அதிகளவிலான ஆராய்ச்சி கட்டுரை களை வெளியிட்டு வருகிறார்கள் என  ஸ்கோப்பஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. 2010இல் 3.09 லட்சம் ஆராய்ச்சிக் கட்டு ரைகள் வெளியிட்ட சீனா 2020இல் 6.69 லட்சம் தரமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

அதிகளவிலான தரமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடும் பட்டியலில் கடந்த மாதம் சீனா அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி  முன்னேறியுள்ளது. நவீன சீனத்தின் வழிகாட்டி டெங்  ஜியோ பிங் கொண்டுவந்த வேளாண், தொழில், அறிவியல் மற்றும் பாதுகாப்பு  ஆகிய நான்கு துறைகளை நவீனப் படுத்தும் திட்டத்தின் அடிப்படையில் 1976 களில் இருந்தே சீனா அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து அதிக கவனம் செலுத்தி வந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு உள்நாட்டு உற்பத்தியில் 2.07 சதவீத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சீனா முதலீடு செய்தது.2018 ஆம் ஆண்டு   40 லட்சம் ஆராய்ச்சியாளர்கள் கொண்ட முதன்மை நாடாகவும் அதிக தரமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடும் நாடாகவும் சீனா வளர்ந்து நின்றது. தீவிர ஆய்விற்கு பிறகு வெப் ஆஃப் சயின்ஸ் வெளியிட்ட தரவுகளின் படி அதிக தரம் உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளை சீனா வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.மேலும் இத்தனை ஆண்டுகள் சீனாவின் ஆராய்ச்சிகளை அமெரிக்கா இருட்டடிப்புச் செய்ததும் இந்த தரவுகளின் மூலம் வெளி வந்துள்ளது.

அறிவியல் ஆராய்ச்சிகளை சரி யான முறையில் கொண்டு செல்வதற் காகவும் ஆராய்ச்சியை ஊக்கப்படுத்த வும் சீன அரசாங்கம் சில முடிவுகளை அமல்படுத்தியது. ஆராய்ச்சிகளை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு மானியத்தை வெட்டுவது,விருதுகளை நிறுத்தி வைப்பது மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு போனஸ் வழங்குவது என சிறப்புத் திட்டங்களையும் அறிவித்தது. 2010 ஆம் ஆண்டு உலகின் பல நாடுகளில் இருந்து மாணவர்களை ஈர்க்க குறிப்பிடத் தகுந்த ஒரு திட்டத்தை சீனா அறிமுகம் செய்தது.ஆயிரம் திறமைகள் (தௌசன்டு டேலன்ட்ஸ்) என்ற அந்த திட்டத்தின் அடிப்படையில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு நிதி உதவி,  ஊக்கத்தொகை, ஆராய்ச்சிகளுக்கான சிறப்பு நிதி உதவி, மானியங்கள், ஆராய்ச்சி மாணவர்களின் விசாக் களுக்கு முன்னுரிமை,இருப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது என பல சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த திட்டம் பல இளம் விஞ்ஞானி களை சீனாவிற்கு மீண்டும் கொண்டு வந்தது.மேலும் அமெரிக்காவிலும் பலர் இந்த திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி களை மேற்கொண்டனர்.இதை ஏற்றுக்கொள்ள முடியாத அமெரிக்கா, சீனாவின் திட்டத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தவர்கள் மீது  அமெரிக்க நீதித்துறை மூலம் விசார ணை  நடத்தியது. இதில்  2021இல் ஹார்வர்டு பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் ஒருவரை குற்றம் சாட்டி 2023இல் அவருக்கு தண்டனை கொடுத்தது. புதிய தொழில்நுட்பக் கண்டு பிடிப்புகளே நவீன சீனாவின் வளர்ச்சி யின் முக்கிய அங்கமாக உள்ளது. இந்த அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தின் அடிப் படையில் உலக நாடுகள் அனைத்தை யும் விட புதிய தொழில்நுட்பக் கண்டு பிடிப்புகளான செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் சீனா முன்னணி நாடாக வளர்ச்சி பெற்றுள்ளது.

;