world

img

உலகப் பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாக சீனா

பெய்ஜிங், ஜன.10- உலகம் முழுவதற்குமான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொற்று நோய்க்கட்டுப்பாட்டில் முன்னணி இடத்தை சீனா அடைந் துள்ளது என்று சீனா நிதி மற்றும் பொருளாதாரத்துறை தெரிவித் துள்ளது. பிற நாடுகளுடனான வர்த்த கம், தொழில்நுட்ப ரீதியாக புதிய சாதனைகள் மற்றும் உற்பத்தி யில் முன்னேற்றம் ஆகியவை சீனாவை முன்னணி நாடாக ஆக்கி யுள்ளது என்று அத்துறையின் அதிகாரிகளில் ஒருவான ஹான் வென்சியூ கூறியுள்ளார்.

உலக வங்கியின் கணிப்பின்படி 2021 ஆம் ஆண்டில் சீனாவின் உண்மை யான மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 விழுக்காடு வளர்ச்சியாக இருக்கும். நிதித்துறையில் கூடுதல் ஆதரவு கிடைக்கப்போவதால், இந்த வளர்ச்சி அடுத்த கட்டத்தை அடையும். சீனாவின் இத்தகைய வளர்ச்சி க்கு ஒரு முக்கியமான அணுகு முறையை வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். தொற்றைக் கட்டுப்படுத்துவது மற்றும் பொரு ளாதார வளர்ச்சி ஆகிய இரண்டுக் கான பணிகளை ஒருங்கிணைத்து சீனா செயல்படுகிறது என்ப தையே அவர்கள் அத்தகைய அணுகுமுறை என்கிறார்கள்.  சராசரி ஆண்டு வருமானம் 12 ஆயிரம் அமெரிக்க டாலரைத் தொட்டு விடும் என்றும் அவர்கள் கணிக்கிறார்கள். தொற்று ஏற்படுத்திய மந்த நிலையிலிருந்து மிக விரைவாக உலகின் இரண்டாவது பொரு ளாதாரமான சீனா மீண்டிருக்கிறது. நுகர்வோர் விலைக் குறியீடும், நகர்ப்புற வேலைவாய்ப்பும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு ள்ளன. கடந்த ஓராண்டில் 1 கோடியே 20 லட்சம் புதிய வேலை கள் நகர்ப்புறங்களில் உருவாக் கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப் பின்மை விகிதம் மிகவும் குறைந்த தற்கு இது காரணமாக அமைந்தது. உலக வர்த்தகத்தில் மிகப் பெரிய பங்கை சீனா வகிக்கிறது. உலக அளவிலான வர்த்தகம் அதி கரிப்பு என்பது பெரும்பாலும் சீனாவின் பங்களிப்பாகவே உள்ளது.  இன்னும் துல்லியமான புள்ளிவிபரங்கள் வெளியாக வில்லை. ஆனால், சீனாவின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்று மதியின் மதிப்பு 6 லட்சம் கோடி அமெரிக்க டாலராக இருக்கும் என்று அந்நாட்டின் வர்த்தக அமைச்சகம் எதிர்பார்க்கிறது.