world

img

ஃபெரோ தீவின் பாரம்பரியம் - 1400 திமிங்கலங்கள் கொன்று குவிப்பு 

டென்மார்க் : பாரம்பரிய திருவிழாவைக் கொண்டாடிய ஃபெரோ தீவு மக்கள் ,  1400க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை கொன்று குவித்துள்ளனர் .இச்செயல் சமூக ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலில்,  ஸ்காட்லாந்துக்கும் , ஐஸ்லாந்துக்கும் இடையில்  டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக அமைந்துள்ளது ஃபெரோ தீவு . இந்த தீவின் மக்கள் , ஒவ்வொரு வருடமும்  திமிங்கல வேட்டையாடுதலை  அவர்களின் பாரம்பரிய திருவிழாவின் ஒரு பகுதியாகக் கருதி வருகின்றனர். இந்த பழக்க முறையை , விலங்கு உரிமைக் குழுக்கள் நீண்ட காலமாக விமர்சித்து வந்தாலும் , உள்ளூர் வாசிகள் இந்த நடைமுறையைப் பாதுகாத்து வருகின்றனர் .

இந்தமுறையும் , கடந்த வாரம் இத்திருவிழாவை ஃபெரோ தீவு மக்கள் கொண்டாடினர் . அப்போது , படகுகள் மூலம் 1,400க்கும் மேற்பட்ட டால்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்தனர். பின்னர் , அவற்றை ஒவ்வொன்றாகக் கொன்று குவித்தனர் .இதனால் , கடற்கரை பகுதி நீர் முழுக்க ரத்தம் சிந்தப்பட்டு , சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது .

ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர் .

;