world

img

ஏமனுக்கான ஈரான் தூதர் பலி

 

கொரோனா தொற்றின் காரணமாக ஏமனுக்கான ஈரான் நாட்டு தூதர் பலியாகியுள்ளார்.

ஏமன் மற்றும் சவூதி அரேபியா நாடுகளுக்கு இடையே அண்மைகாலமாக ஏற்பட்டு வரும் அரசியல் முரண்பாடு காரணமாக அந்நாடுகளில் பதற்றமான சூழல் வருகிறது. குறிப்பாக, ஏமன் நாட்டின் முக்கிய நகரங்களை குறிவைத்து சவூதி அரேபியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ஏமன் நாடும் பதிலடி கொடுத்து வருகிறது. இத்தகைய மோதல் சம்பவங்களால் மேற்காசிய நாடுகளில் போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, ஏமன் நாட்டின் வன் எல்லையில் பயணிகள் விமானங்கள் உட்பட அனைத்து வகையான விமானங்களும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், ஏமனுக்கான ஈரான் நாட்டு தூதராக இருப்பவர் ஹசன் இர்லோ. இவர் ஏமன் மற்றும் சவூதி அரேபியா இடையேயான போர் பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருந்தார். இச்சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக ஏமன் நாட்டிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரது உடல்நிலையில் பெரும் முன்னேற்றம் காணப்படவில்லை.

ஆகவே, ஹசன் இர்லோ-வை தங்கள் நாட்டிற்கு அழைத்து வந்து உயரிய சிகிச்சை அளிக்க ஈரான் நாடு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து அவரை விமானம் மூலம் ஈரான் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஆனால், இந்த விமானப் பயணத்திற்கு சவூதி அரேபியா போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறப்படுகிறது.  

இதையடுத்து ஹசன் இர்லோவை தங்கள் நாட்டிற்கு அழைத்து வர ஈரான் அரசு மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தது. இச்சூழலில் கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ஹசன் இர்லோ சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று அதிகாலை உயிரிழந்தார். இவரின் மரணம் ஈரான் நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், சவூதி அரேபியாவின் இந்த மனிதாபிமானமற்ற செயல் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.      

;