ஐந்தில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியும் அபாயம்
உயிரினங்களில் ஐந்தில் ஒரு பங்குக்கும் மேற்பட்ட இனங்கள் அழிந்துபோகும் அபாயத் தில் உள்ளன என்று ஐக்கிய நாடு கள் சபை அறிக்கை தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 97 சதவீத மீன்களும் அழிவின் விளிம்பில் உள்ளன என தெரிவித்துள் ளது. சுரண்டல், அளவுக்கு அதிகமாக வேட்டையாடுதல், மீன்பிடித்தல் போன்ற மனிதர்களின் அச்சுறுத்தல்கள் இந்த அழிவிற்கு காரணம் என்றும் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஈரான் விமானத்தை திருடிய அமெரிக்கா
ஈரான் வெனிசுலாவுக்கு விற் பனை செய்த சரக்கு விமா னத்தை அபகரித்துள்ளது அமெரிக்கா.ஈரானின் மஹான் ஏர் நிறுவனத்தின் மூலம் வெனிசுலா அரசு விமான நிறுவனமான எம்ட்ராசூருக்கு போயிங் 747 விமானம் விற்பனை செய்யப்பட்டது. அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி விற்பனை செய்யப்பட்டது என கூறி அதன் மீது ஆயுத கடத்தல் குற்றச்சாட்டை வைத்து அபகரித்துள்ளது அமெரிக்கா.
இஸ்ரேலின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை
2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் ஒன்பது ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளது என இஸ்ரேல் குற்றம் சாட்டியது. ஆனால் தற்போது வரை அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் இஸ்ரேல் வெளியிடவில்லை என அகதிகள் அமைப்பின் கமிஷனர் ஜெனரல் தெரிவித்துள் ளார். போர்க்குற்றங்களை மறைக்கவே இவ்வாறு குற்றச் சாட்டுகளை வைக்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2025 இல் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்ட காலத்திற்குள் இத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும் ஜனாதிபதி செய்தி தொடர்பு தற்காலிக அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்தலை தேர்தல் ஆணையம் முழு பொறுப்பேற்று நடத்தும் எனவும் தேவைப்படும் போது ஆணையத்துக்கு அரசு உதவி செய்யும் எனவும் அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் தேர்தலுக் கான நிதி ஒதுக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.