மனித மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் பாதிப்பா ?
மைக்ரோபிளாஸ்டிக்கால் ( பிளாஸ்டிக் நுண்துகள்களால்) மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து புதிய ஆய்வு முடிவு கள் அதிர்ச்சியை கிளப்பியுள்ளன. மனித மூளை யில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாகவும் இது தற்போதுதான் முதல் முறையாக கண்டறியப்பட்டுள் ளது எனவும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. எனினும் இந்த ஆய்வு முடிவுகள் மற்ற விஞ்ஞானிகளால் உறுதி செய்யப்படவில்லை, உறுதி செய்ய சில காலம் எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மைக்ரோபிளாஸ்டிக்கால் ( பிளாஸ்டிக் நுண்துகள்களால்)
கடந்த மாதம் சாட் நாட்டில் ஏற்பட்ட கடுமை யான வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது என மனி தாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா அவை தெரிவித்துள்ளது. மேலும் கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. 2,50,000 ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள், 70,000 வீடுகள், 29,000க்கும் அதிகமான கால்நடைகள் அழிந்துள்ளன என சாட் நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுதங்களுடன் செல்லும் கப்பலுக்கு நமீபியா தடை
இஸ்ரேலுக்கு ஆயுதம் கொண்டு செல்கி றதா என்ற சந்தேகத்தின் பேரில் எம்.வி. கேத்தரின் என்ற சரக்குக் கப்பல் நமீபியா விற்குள் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அக்கப்பல் இஸ்ரேலுக்கு ஆயு தங்களை கொண்டு செல்வதாக தகவல் கிடைத்த தாகவும், அதன்பிறகு சர்வதேச அமைச்சகம், பொதுப்பணித்துறை மற்றும் பாதுகாப்பு அமைச் சகம் ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பி, கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் நமீபிய நீதித்துறை அமைச்சர் இவோன் தௌசாப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்- கமலா நேருக்குநேர் விவாதம்
அமெரிக்க ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிசுடன் நேரடி விவாத நிகழ்ச்சி யில் பங்கேற்க குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு முன்பு விவாத விதிகளை சுட்டிக்காட்டி விவாதத்தை தவிர்க்கப் போவதாக டிரம்ப் தெரி வித்திருந்தார். ஆனால் தற்போது விவாதத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் சிஎன்என் நடத்திய விவாதத்தில் பின்பற்றப்பட்ட விதிகள் இருக்கும் எனவும் விவாதத்தை ஏபிசி நியூஸ் நேரலை செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா.விற்கு எதிராக இஸ்ரேல் பணம் கொடுத்து விளம்பரம்
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளது எனவும் ஹமாசுக்கு உதவுகிறது எனவும் கூகுளில் பணம் கொடுத்து விளம்பரம் செய்கிறது இஸ்ரேல் அரசு. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அகதிகள் அவை குறித்து கூகுளில் தேடும் போது இந்த விளம்பரம் வரும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.