world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பாகிஸ்தான் வெள்ளத்தில் 63 பேர் பலி 
பாகிஸ்தானின் கைபர் பக் துன்க்வான் மாகாணத் தில் கனமழையால் ஏற்பட்ட  வெள்ளத்தில் 63 பேர் பலியாகி யுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 33 குழந்தைகள், 15 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் பலியாகியுள்ளதாகவும் 78 நபர்கள் படுகாயமடைந்துள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை கார ணமாக 477 வீடுகள் இடிந்ததாகவும், 2,725 வீடுகள் சேத மடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் உளவுத்துறை தலைவர் ராஜினாமா 
இஸ்ரேலின் ராணுவ உள வுத்துறை இயக்குநரகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் அஹ ரோன் ஹலிவாவின் தனது பத வியை ராஜினாமா செய்துள்ளார். 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலை முன்கூட்டியே கண்டறிய தவறிய காரணத்தால் ஏற்பட்ட விளைவுகளை தொடர்ந்து தற்போது ராஜினாமா செய்துள்ளார்.  தமது பொறுப்பின் கீழ் உள்ள உளவுத் துறை  ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்றவில்லை என பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

நைஜரில் இருந்து வீரர்களை திரும்பப் பெறும் அமெரிக்கா
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் உள்ள தனது ராணுவ வீரர்களை திரும்பப்பெறு வதாக அமெரிக்கா அறிவித்துள் ளது. அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் ஏகாதிபத்திய ஒடுக்குமுறை சுரண்டல்களுக்கு எதிராகவும் அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் எனவும் நைஜர் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் அமெரிக்கா தனது 1,000 ராணுவ வீரர்களை நைஜரில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.  

அமெரிக்க ராணுவ தளம் மீது  இராக்கில் இருந்து தாக்குதல் 
வடகிழக்கு சிரியா வில் உள்ள அமெ ரிக்க ராணுவத்தளம் மீது இராக் எல்லைக் குள் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. திங்கட்கிழமையன்று இராக் எல்லை பகுதியில் இருந்து 5 ஏவுகணைகள் ஏவப்பட்டன. அதனை அமெரிக்க ராணுவம் முறியடித்ததாகவும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது  இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய பிறகு மத்திய கிழக்கு நாடுகளில் தொடர் பதற்றம் நிலவுவது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தானில்  ஈரான் ஜனாதிபதி 
ஈரான்  ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தானு க்கு மூன்று நாள் பயணமாக சென்றுள் ளார். பிப்ரவரி 8 பாகிஸ்தான் பொதுத் தேர்த லுக்குப் பிறகு முதல் வெளிநாட்டு தலைவராக ஈரான் ஜனாதிபதி சென்றுள்ளார். இஸ்ரேலுக் கும் ஈரானுக்கும் போர்ச் சூழல் தீவிரமாகி வரும் நிலையில், தனது எல்லை நாடான பாகிஸ்தா னுடன் போர்ச்சூழல் மற்றும் ஒத்துழைப்பு குறித்து பேசுவதற்கான பயணமாக இது இருக்க லாம் என கூறப்படுகிறது. 

இஸ்ரேல் படுகொலை செய்த கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து குழந்தை மீட்பு

ரஃபா, ஏப்.22-  இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்த பாலஸ்தீன பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் மீட்கப் பட்டுள்ளது. 

இஸ்ரேல் ராணுவம் காசாவின் ரஃபா எல்லைக்குள்  குண்டுகள் வீசி பயங்கர வாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரு கிறது. ஞாயிற்றுக்கிழமை  மாலை ரஃபா  பகுதியில் இருந்த இரண்டு வீடுகளின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 13 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை படு கொலை செய்தது இஸ்ரேல் ராணுவம்.

சப்ரீன் அல்-சகானி என்ற கர்ப்பிணி பெண்ணும் அவரது கணவர் மற்றும் ஒரு குழந்தையும் இந்த தாக்குதலில் உயிரி ழந்தனர். 30 வார கால கர்ப்பிணியான அப் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை பாலஸ்தீன மருத்துவக் குழுவினரால் அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டு இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் மார்பில் தியாகி சப்ரீன் அல்-சகானி குழந்தை என டேப்  ஒட்டப்பட்டுள்ளது.  தற்போது  அக்குழந்தை 3 முதல் 4 வாரங்களுக்கு நேரடி மருத் துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

;