டெல்அவிவ், பிப்.20- உலகம் முழுவதும் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2023-ஆம் ஆண்டு 44 சதவீதம் அதிகரித்துள்ளது என பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டு 69 பத்திரிகையாளர்கள் படு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
2023-ல் இந்த எண்ணிக்கை 99-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2023-ஆம் ஆண்டு படுகொலையான ஊடகவியலாளர் கள் மற்றும் ஊடக ஊழியர்களில் கிட்டத் தட்ட நான்கில் மூன்று பேர் பாலஸ்தீன ர்கள் என்றும் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை போரில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 2023-இல் கொலை செய்யப்பட்ட 99 பத்திரிகை யாளர்களில் 78 பேர் காசாவில் மட்டும் கொலையாகியுள்ளனர். இதில் 72 பேர் பாலஸ்தீனம், 3 பேர் லெபனான் மற்றும் 2பேர் இஸ்ரேல் பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள். காசாவில் பத்திரிகையாளர்களின் வீடுகள் மற்றும் குடும்பங்களின் மீது நேரடியாகவே இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசியது மற்றும் தரைவழித் தாக்குதல் நடத்தியது.
பத்திரிகையாளர்கள் என அடை யாளம் காணக்கூடிய வகையில் கவச உடை அணிந்திருந்த போதும் அவர்கள் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து முழு விவரங்களை பெற முயற்சித்த போது இஸ்ரேல் அரசு ஒத்துழைக்க மறுத்தது என வும், இதனால் ஏன் காசாவில் அதிக பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு ள்ளார்கள் என்ற உறுதியான பின்னணியை விவரிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலில் பல பத்திரி கையாளர்கள் தங்கள் முழு குடும்பங் களையும் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது.மேலும் இவர்கள் வேண்டுமென்றே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பணியில் உள்ள ஊடகவிய லாளர்களை வேண்டுமென்றே குறி வைத்து கொலை செய்வது சர்வ தேச சட்டப்படி போர்க்குற்றமாகும். இதனால் காசாவில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை எந்த ஆதாரமும் இன்று அவர்கள் பயங்கரவாத குழுக்களின் உறுப்பினர்கள் என இஸ்ரேல் பொய்யை பரப்பி வருகிறது பாலஸ்தீன ஊடக அலு வலக தகவலின் படி, 2023 அக்டோ பர் 7 முதல் 2024 பிப்ரவரி வரை பாலஸ்தீனத்தில் படுகொலை செய்யப்பட்ட மொத்த ஊடகவிய லாளர்கள் எண்ணிக்கை 126 ஆகும். ஊடகவியலாளர்களை கொலை செய்வது மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு விசா மறுப்பது, இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை அடிக்கடி நிறுத்தி தகவல்கள் பரிமாற்றத்தை நிறுத்துவது என அனைத்து அராஜகங்களையும் இஸ்ரேல் அரங்கேற்றி வருகிறது.