world

img

காலத்தை வென்றவர்கள் : நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்கி நினைவு நாள்

இவர் 1904-ம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி, உக்ரைனில் உள்ளவிலியா என்னும் ஊரில் ஒரு கூலித்தொழிலாளரான தந்தைக்கும், சமையற்காரரான தாய்க்கும் பிறந்தார். இவர் 32 வயது வரை மட்டுமே வாழ்ந்தவர். தனது 13 ஆவது வயதிலேயேபோல்ஷ்விக் கட்சியில் சேர்ந்துஇயங்கினார். போர் முனையில்படுகாயமுற்றதால் தன் வாழ்வின் கடைசி 12 ஆண்டுகளை பார்வையில்லாமல் கழித்துள்ளார். 1931-ல் வீரம்விளைந்தது (எப்படி எஃகு பதப்பட்டது) என்கிற நூலை எழுதி முடித்தார். இந்நாவலின் முதல் வாசகருமாகவும் இருந்து, அவருக்கு கடைசிவரை ஆதரவும் தந்தவர் புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி ஆவார். இதன் பின்னர் ஆசிரியர் உக்ரைன்-சோவியத்து ஒன்றியத்துக்கிடையே நடந்த போரின் அடிப்படையில் ‘புயலின் மூலம் தோன்றியவர்கள்’ எனும் நூலை எழுதத் தொடங்கினார். ஆனால் அந்நூலை எழுதி முடிக்கும் முன்பே இறந்துவிட்டார்.

”இந்நாவலை எழுதி முடித்ததும், என்னைச் சுற்றிவளைத்திருந்த இரும்பு வளையமொன்றிலிருந்து விடுபட்ட உணர்வு பெற்றேன். அசைய முடியாமை என்ற துன்பத்தை வென்றேன். மறுபடியும் போர்வீரர்களில் ஒருவனாக மாறிவிட்டேன்.” என எப்படி எஃகு பதப்பட்டது நூலை முடித்தவுடன் நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்கி கூறியுள்ளார். இவர் 1936ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் நாள் மறைந்தார்.உருசியாவின் மாசுகோ நகரின், முக்கிய வீதிகளில் ஒன்றான கோர்க்கி வீதியில் அவர் வாழ்ந்த 14-ம் எண் வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அதில் ‘எப்படி எஃகு பதப்பட்டது’ நூலின் பன்னாட்டுப் பதிப்புகளும் சேகரித்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

===பெரணமல்லூர் சேகரன்===

;