நியூயார்க், டிச.9 - உக்ரைன் - ரஷ்யா போரை உடனடியாக நிறுத்த டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற சந்திப்பில் பிரான்ஸ், உக்ரைன் ஜனாதிபதிகளை சந்தித்த பிறகு தனது ட்ரூத் சமூக ஊடகத்தளத்தில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். அப்பதிவில், 1,000 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் முன்வந்து ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.
தொடங்கியே இருக்கக்கூடாத இந்த போரின் காரணமாக ரஷ்யாவும் உக்ரைனும் லட்சக்க ணக்கான வீரர்களை இழந்துள்ளன. உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அமைதியை கொண்டு வரு வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும். பல உயிர்கள் தேவையில்லாமல் சாகடிக்கப்படுகின்றன, பல குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன என பதிவிட்டிருந்தார். மிகப்பெரிய அளவில் போர் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடு கள் முழுவதும் விரிவடைவதால் உலக பொருளாதாரம் கடுமை யான நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது.
இது உலகம் முழுவ தும் உள்ள தொழிலாளர்களையும் இதர பிரிவினரையும் கடுமையாக பாதித்து வருவதுடன் கார்ப்பரேட்டுகளின் மூல தனத்தையும் பாதிக்கின்றது. இத்தகைய போர்கள் மூலம் கார்ப்பரேட்டுகள் ஒருவகையில் தங்கள் மூலதனத்தை பெருக்கிக் கொண்டாலும் தற்போதைய சூழலில் ஐரோப்பிய, அமெரிக்க முதலாளிகள் போர் நீடிப்பதை விரும்பவில்லை. அந்த முதலாளிகளின் விருப்பத்தையே அமெ ரிக்காவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் முதலாளியும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவருமான டிரம்ப் செயல்படுத்துகிறார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போதே நான் ஜனாதிபதியாக பதவி ஏற்ற உடனேயே உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அறிவித்தார். கடந்த வரம் நடைபெற்ற ஒரு நேர்காணலில் நேட்டோ கூட்ட ணியில் இருந்து வெளியேறுவதை பற்றி பரிசீலிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நேட்டோ உறுப்பினர்கள் ராணு வத்திற்கு ஆகும் செலவுகளை முறையாக ஏற்றுக்கொண்டால் கூட்டணியில் தொடர்வோம். இல்லை என்றால் நிச்சயமாக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் எனவும் தெரி வித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.