உலக சுகாதார அமைப்பு, இஸ்ரேலிய ராணுவப் படைகளிடமிருந்து ஒரு நோட்டீஸ் கிடைக்கப் பெற்றிருக்கிறது. தெற்கு காசாவில் 24 மணி நேரத்திற்குள் உங்களது மருந்து பொருட்கள் குடோனிலிருந்து அனைத்து மருந்துகளையும் அப்புறப்படுத்தாவிட்டால் அவை அனைத்தையும் குண்டுவீசி தகர்த்து அழித்துவிடுவோம் என்ற மிரட்டல் நோட்டீஸ் தான் அது. உலக சுகாதார அமைப்பு பெரும் அதிர்ச்சியை தெரிவித்திருக்கிறது
காசா பாலஸ்தீனர்கள் மீதான மிகப்பெரும் இன அழிப்பு தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மனிதத்தன்மை அற்ற இந்தக் கொடிய தாக்குதலை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இது உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். காசா மீதான தாக்குதலை முற்றாக எவ்வித நிபந்தனையுமின்றி முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு மோடி அரசு அழுத்தம் தர வேண்டும்..