world

img

பாலஸ்தீனர்களின் வீடுகளுக்குத் தீ

காசா, பிப்.28- பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப்பகுதி யில், இஸ்ரேலிய ராணுவத்தால் குடி யமர்த்தப்பட்ட இஸ்ரேலியர்கள் அப்பகுதி களில் உள்ள பாலஸ்தீன மக்களின் வீடுகளுக்கு தீ வைத்து அழித்துள்ளனர். இரவு நேரத்தில் மேற்குக் கரைப்பகுதி களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்துத் தாக்கியிருக்கிறார்கள். 400 பேர் கொண்ட கும்பல் நடத்திய இந்த  வன்முறைத் தாக்குதல்களில் பாலஸ் தீனத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டார். 390 பேர் காயமடைந்தனர். 75 வீடு கள் முழுமையாக நெருப்புக்கு இரை யாகின. ஏராளமான வீடுகள், கடைகள், கார்கள் மற்றும் விவசாய நிலங்கள் பெரும் சேதமடைந்தன.  ஒரு வீட்டைத் தீ வைக்கும் போது, அதில் ஒரு குடும்பம் உள்ளே இருந்ததைப் பற்றிக் கவலைப்படாமல் தீ வைத்தனர்.  தங்களுக்கு ஆதரவாக இஸ்ரேலிய ராணுவம் இருக்கும் என்ற நம்பிக்கை யில்தான் அவர்கள் இந்த வெறியாட்டத் தில் இறங்கினர். அது போலவே, தாக்கு தல்களுக்கு எதிராக சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கத் தொடங்கி யவுடன் இஸ்ரேலிய ராணுவம் அந்தப் பகுதிகளுக்கு விரைந்தது. ஆர்ப்பாட்டக் காரர்களைக் கலைப்பதற்கான முயற்சி யில் அவர்கள் இறங்கினர். தாக்கியவர் களைப் பாதுகாப்பதில் இஸ்ரேலிய ராணு வம் மிகவும் கவனமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். குடியேற்றம் செய்யப்பட்டவர்கள் நடத்திய தாக்குதல்களுக்கு இஸ்ரேல்  அரசுதான் முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று மேற்குக் கரைப்பகுதியில் உள்ள பாலஸ்தீன நிர்வாகம் கோரியுள்ளது. இத்தனைக்கும், இந்தப்பகுதிகளில் அமைதியை எப்படிக் கொண்டு வர வேண்டும் என்று பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பு ஒன்றாக அமர்ந்து பேசிய சில மணிநேரங்களுக்குள் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.