world

img

இஸ்ரேலில் அரேபிய சிறுபான்மையினர் மீது அதிகரிக்கும் தாக்குதல்

ஜெருசலம், செப். 29- இஸ்ரேலில் வடக்கு நகரமான பாஸ்மத் தபூனில் ஒரே குடும்பத் தைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் இரண்டு பதின் பருவ ஆண் குழந்தைகள் உட்பட ஐந்து அரே பிய சிறுபான்மையினர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டை விட இந் தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை 180 க்கும் மேற்பட்ட அரே பிய சிறுபான்மையினர்  துப்பாக் கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ள தாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொலைகளை கட்டுப் படுத்தவோ முறையான விசா ரணை நடத்தவோ பெஞ்சமின் நெதன்யாகுவின் மத-தேசிய வாத அரசாங்கம் தயாராக இல்லை. இந்த கொலைகளை கட்டுப் படுத்தும் திறன் இஸ்ரேலுக்கு உள்ளது.இதை கட்டுப்படுத்த என்ன செய்யவேண்டும் என இஸ்ரேல் அரசுக்கும் தெரியும். ஆனால் அதை செய்வதற்கான விருப்பமும் தலைமையும் இஸ்ரேலிடம் இல்லை என அரே பிய சிறுபான்மையினருக்கான இஸ்ரேல்  கட்சி தலைவர் மன்சூர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அரசும் காவல்துறை யும் வேண்டுமென்றே அரபு சிறு பான்மை சமூகத்தை  புறக்க ணிப்பதாகவும்,

குற்றவாளிகள் தண்டனையின்றி செயல்பட உதவுவதாகவும் அரபு மேயர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  பல ஆண்டுகளாக மோச மான அரசியல் நெருக்கடியை  இஸ்ரேல் எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது நெதன்யாகு அரசு நீதித்துறையில் பல்வேறு மாற்றங்களை திணித்து வரு கிறது.இந்நிலையில் இஸ்ரே லில் உள்ள அரேபிய சிறுபான் மையினர் தங்கள் சமூகங்களில் தனிப்பட்ட பாதுகாப்பில் பாதிப்பு ஏற்பட்டு வருவதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண் டும் என்று கோரிக்கை வைத்துள் ளனர். கொலையாளிகளை பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று மட்டும் இஸ்ரேல் காவல்துறை செய்தி தொடர்பா ளர் தெரிவித்துள்ளார். அரேபிய குடிமக்கள் பெரும் பாலோர் பாலஸ்தீன வழித் தோன்றல்கள், இஸ்ரேலை உரு வாக்க  1948 ஆம் ஆண்டு நடத்தப் பட்ட கொடூரமான மதவாத போரில் அகதிகளாக  வெளி யேறிய ஆயிரக்கணக்கான மக்க ளின் சந்ததிகளான இவர்கள் தற்போது இஸ்ரேலின்  மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்காக உள்ளனர்.பல ஆண்டுகளாக  கொடிய வறுமை, கல்வியின்மை மற்றும்அடைப்படை சேவை கூட முழுமையாக கிடைக்கப் பெறாதவர்களாக இஸ்ரேலிய ஆட்சியாளர்களால் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டும் ஒதுக்கப்பட்டும் வருகிறார்கள்.