world

img

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் ஹர்னாஸ் கவுர் சாந்து

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் 70வது பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் பிரபஞ்ச அழகி  பட்டத்திற்காகப் பங்கேற்றனர். இறுதியில் இந்தியா சார்பில் பங்கேற்ற பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்த் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். பஞ்சாபி மொழிப் படங்களில் நடித்துள்ள ஹர்னாஸ் கவுர் சாந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார்.  மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார்.

இந்தியா சார்பில் லாரா தத்தா 2000 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பிறகு 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

;