world

img

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த தமிழ் அமைப்புகள் கோரிக்கை....

கொழும்பு:
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை உட்படுத்த இலங்கை தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், தமிழ் சிவில் அமைப்புக்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு கடிதம் எழுதியுள்ளன.

ஜனவரி 15ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையின் படைத்தரப்பினரை நீதி விசாரணையிலிருந்து பாதுகாப்போம் என்று இலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் உள்ளடங்கிய அரசியல் தலைவர்கள் கூறி வந்துள்ளார்கள். ஓர்உள்ளூர் அமைப்பு மூலமாக இலங்கை யின் பொறுப்பேற்பை ஏற்படுத்த முடியாது என்பதை ஐ.நா. உறுப்பு நாடுகள்ஒப்புக்கொள்ள வேண்டியநேரம் வந்துவிட்டது. இராணுவமயமாக்கல், அரசியல் கைதிகளைக் காலவரையறை யின்றி தடுத்து வைத்திருத்தல், தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் நிலஅபகரிப்பு, மேய்ச்சல் தரை போன்ற தமிழ்மக்களின் பாரம்பரியமான கூட்டு நில உரிமைகளை மறுப்பது, அரசியல் மற்றும் சமூகசெயற்பாட்டாளர்களைக் கண்காணிப் பதைத் தீவிரப்படுத்துதல், கொரோனா நோயால் இறக்கும் முஸ்லிம் சகோதரரின் ஜனாஸா அடக்கத்தை மறுத்தல்,நினைவேந்தல் உரிமையை மறுத்தல்போன்ற தமிழ் மக்களுக்கு எதிராகத்தீவிரமாக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறை யானது மோசமாகி கொண்டிருக்கும் சூழ்நிலையை கோடிட்டுக் காட்டுகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40/01 தீர்மானத்தின் கீழ் இலங்கை அரசின் உறுதிமொழி குறித்து ஆராய் வதற்காக வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கூடும் ஐ.நா. மனித உரிமைகள் சபை,‘இனப்பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப் போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும் பொறுப்பிலிருந்து இலங்கை தவறிவிட்டது என்றும், இதனை ஓர் உள்ளூர் ஏற்பாட்டின் மூலமாகவோ அல்லது கலப்புப் ஏற்பாட்டின்  மூலமாகவோ இலங்கை செய்யும் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை உள்ளடக்கிய இறுதித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்’ என்றும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.மேலும், இனப்படுகொலை, போர்க்குற்றங்களை விசாரிக்க இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா. பொதுச்சபை, ஐ. நா. பாதுகாப்பு சபை போன்றவை எடுக்க வேண்டும். ஐ. நா. பொதுச் சபையின் உப பிரிவாக, சிரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளைச்சேகரிக்கின்ற நடைமுறை போன்ற தொன்றை (கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு) ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்டவைகளையும் நாங்கள் தீர்மானத்தில் கோருகிறோம் என்று அக்கடி தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;