world

இலங்கை கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் கிராமங்களை நேசிக்கும் திட்டம்

கொழும்பு, மே 28- கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் விதம், சீன நிறுவனங்களால் தொ டங்கப்பட்ட கிராமங்களை நேசிக்கும் திட்டம் இலங்கை யின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலை வில் உள்ள கெண்டா கிராமத் தில் தொடங்கப்பட்டது. இதற் கான அடிக்கல் நாட்டுவிழா 27ஆம் நாள் நடைபெற்றது.  இன்னல்களைச் சமாளிக்க இலங்கைக்குச் சீனா தொ டர்ந்து இயன்ற அளவில்உதவி அளிக்கும் என்று இலங்கைக் கான சீனத் தூதர் குய் ஜென்ஹாங் தெரிவித்தார். இத்திட்டம், உள்ளூர் கிராம மக்களுக்கு உற்பத்தி,செய லாக்கம் மற்றும் விற்பனைத் தொழில் சங்கிலியில் பயிற்சி அளிப்பதுடன், உள்ளூர் பிரதே சத்தில் ஏறக்குறைய 800 வேலைகளை உருவாக்கும் என்று ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழு மத்தின் தலைமைச் செயல் அதிகாரி லியு என்ஹுவாய் கூறினார்.