கொழும்பு,டிச.6- இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 62.41 சதவீதம் நீர் மின் உற்பத்தியாக பிரதான நீர்த்தேக்கங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதாக இலங்கை மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாற்று எரிபொருளுக்கு முக்கியத்துவம் தரும் வகை யில் நீர் மின்உற்பத்திக்காக 15 முக்கிய நீர்த்தேக்கங்கள் பயன் படுத்தப்படுவதால் 25.37 ஜிகாவாட் மணிநேர மின் உற்பத்தி செய்ய முடிவதாகவும் தெரிவித்துள்ளது. அனல் மின்சாரம் 16.56 சதவீதமும், சூரிய மின் சக்திமூலம் 4.88 சதவீதமும், காற்றாலை மின்சாரம் 4.35 சதவீதமும், சிறிய நீர் மின் திட்டங்களின்மூலம் 10.80 சதவீதமும், உயிரி எரிபொருள் 1.01 சதவீதமும் உற்பத்தி செய்யப்படுவதாக இலங்கை அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நீர்த்தேக்கங்கள்நிறைந்துள்ளன இது நீர்மின் உற்பத்தி அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.