world

img

இந்தோனேசியாவில் பலத்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவின் மாலுகு தீவுகள் பகுதியில் புதன்கிழமை பலத்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. 
இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு தீவுகள் பகுதியில் புதன்கிழமை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 10.13 மணியளவில் ஏற்பட்ட 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்ட  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் நிலநடுக்க பாதிப்பால் மாலுகு தீவுகள் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மக்கள் கடற்கரை பகுதிகளில் இருந்து வெளியேறி உயரமான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

;