states

img

உத்தரகண்ட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் - விஞ்ஞானி எச்சரிக்கை

துருக்கியில் ஏற்பட்டதைப் போன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படக்கூடும் என்று தேசிய புவிசார் இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என்.பூர்ணச்சந்திர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரகண்ட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வரும் அவர், இமயமலைப் பகுதியில் சுமார் 80 நில அதிர்வு நிலையங்களை அமைத்துள்ளதாகவும், அப்பகுதிகளில் நிலைமையைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறதாகவும் தெரிவித்துள்ளார். அப்பகுதியில், நிலத்தின் அழுத்தம் அதிகமாகி வருவதால் துருக்கியில் ஏற்பட்டதைப் போன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை போல் உத்தரகண்ட்டிலும் ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ளார். மேலும், நிலநடுக்கம் ஏற்படும் சரியான நேரத்தையும், தேதியையும் கணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
 

;