world

img

கிரீஸ் பல்கலைக்கழகத் தேர்தல்கள் முதலிடத்தைப் பிடித்த இளம் கம்யூனிஸ்டுகள்

மொத்த வாக்குகள் - 51,890

இளம் கம்யூனிஸ்டுகள் ஆதரவு                           16,684    33.43%
ஆளும்கட்சி ஆதரவு                                                13,807    27.66%
சமூக ஜனநாயகக் கட்சி ஆதரவு                           5,056    10.13%
அரசியல் கட்சி சார்பற்றவர் அமைப்பு                4,992    10%
அரசியல் கட்சி சார்பற்றவர் அமைப்பு                2,642    5.29%
சிரிசா(இடதுசாரி அமைப்பு)                                  1.267    2.54%
இதரர்                                                                            4,200    8.41%
யாருக்கும் வாக்கில்லை                                          1,266
செல்லாத வாக்குகள்                                                1,967

ஏதென்ஸ், மே 20- கிரீஸ் பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் தேர்தலில் கிரீஸ் இளம் கம்யூ னிஸ்டுகளின் மாணவர் அமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது. மே 18 ஆம் தேதியன்று கிரீஸ் நாடு முழு வதும் உள்ள பல்கலைக்கழக மாண வர்களின் சங்கங்களுக்கு தேர்தல் நடை பெற்றது. வகுப்பறைகளில் வகுப்புகள் நடைபெறாமல் தொலைதூர வகுப்பு களாக கடந்த இரண்டாண்டுகள் நடந்தன.  மீண்டும் வகுப்பறைகளுக்கு மாணவர்கள் திரும்பிய பிறகு, தேர்தல்கள் நடை பெற்றுள்ளன. பெருந்தொற்றுக்குப் பிறகு  முதன்முறையாக நடந்த இந்தத் தேர்தலில் அனைத்துக்கட்சிகளும் தங்கள் சார்பில், தங்கள் ஆதரவுடன் பட்டியலை முன்னி றுத்தியிருந்தன. “செம்மலர்” சின்னத்தில் வாக்களிக்குமாறு இளம் கம்யூனிஸ்டுகள் அமைப்பு பரப்புரை மேற்கொண்டது.  75 விழுக்காடு மாணவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். 2019 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் கம்யூ னிஸ்ட் இளைஞர்களின் அமைப்பு நிறுத்திய வேட்பாளர்களின் பட்டியல் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. தற்போது நடந்துள்ள  தேர்தலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. 

நீண்ட காலமாக முதலிடத்தில் வலது சாரி ஆளும்கட்சியின் ஆதரவு மாணவர் அமைப்பு முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது இளம் கம்யூனிஸ்டுகள் ஆதரவு  அமைப்பிடம் அந்த அந்தஸ்தை இழந்திருக் கிறது. இடதுசாரிக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் சமூக ஜனநாயகக் கட்சியின் ஆதரவு அமைப்பு மூன்றாவது இடத்தில் உள்ளது.  வலதுசாரிகளுக்கு மாற்று என்று சில ஆண்டு கள் முன்னணி பெற்ற சிரிசா கட்சியின் ஆதரவு பெற்ற மாணவர் அமைப்பு வெறும் 2.54 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்திருக்கிறது. கிரீஸ் நாட்டின் கல்வித்துறையில் மிகவும் பிற்போக்குத்தனமான அம்சங் களைப் புகுத்த தற்போதைய ஆளும் புதிய ஜனநாயகக்கட்சி முயற்சிக்கும் வேளையில்தான் மாணவர்கள் இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். கல்வித் துறையை மேலும் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகள், கல்லூரி வளாகங்களுக்கு சிறப்புக் காவல்படை உள்ளிட்ட ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக மாண வர்கள் போராடி வந்தனர். அந்தப் போராட்டங்களில் முன்னணி வகித்த இளம் கம்யூனிஸ்டுகள் அமைப்புக்கு மாணவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

பொறுப்பு அதிகரிப்பு

தேர்தல் முடிவுகளுக்கு இளம் கம்யூனிஸ்டுகள் அமைப்பின் பொதுச் செய லாளரான நிகோஸ் அபாடிலோஸ் வர வேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்துக் கருத்து தெரிவித்த அவர், “எங்களுக்கு ஆதரவான வாக்களிப்பில் பங்கேற்ற மற்றும் ஆதரவு தெரிவித்த ஆயிரக்கணக் கான மாணவர்களுக்கு எங்கள் வணக்கங் களைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கு சாதகமான மனநிலையை இந்த  முடிவுகள் உருவாக்குவதோடு, ஒரு வலு வான மாணவர் அமைப்பை மீண்டும்  அமைக்கும் பொறுப்பையும் தந்திருக் கின்றன. மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வருங்காலத்தை நோக்கிச் செல்வதற்கான தடைகளை உடைக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக் கிறது” என்றார். வெற்றி பெற்றுள்ள இளம் கம்யூனிஸ்டுகள் மாணவர் அமைப்பின் பட் டியலில் நிகோஸ் அபாடிலோசின் பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வித்துறையை சீரழிக்கும் கொள்கை களுக்கு எதிரான போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொள்ளாத சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் சிரிசா ஆகிய வற்றின் அமைப்புகளை மாணவர்கள் நிரா கரித்துள்ளனர். அவர்களின் மவுனம் ஆளும் கட்சியின் தனியார்மயக் கொள்கைகளுக்கு மறைமுகமான ஆதரவைத் தருகிறது என்ற கருத்து மாணவர்கள் மத்தியில் எழுந்ததால், அவர்களுக்கு ஆதரவாக இருந்த மாண வர்களில் பலர் இளம் கம்யூனிஸ்டுகள் ஆத ரவு பெற்ற மாணவர் அமைப்புக்கு வாக்க ளித்திருக்கிறார்கள்.

அதிகாரப்பூர்வமான கல்லூரி அமைப்பு களில் இளம் கம்யூனிஸ்டுகள் பொறுப்பில் அமரப் போவதால் கொள்கை ரீதியான பல  முடிவுகளை எடுக்க உதவியாக இருக்கப் போகிறது. ஏற்கனவே உள்ள பல மாணவர் விரோதக் கொள்கைகளைத் திரும்பப் பெறச் செய்யவும் முடியும் என்ப தால் இந்தத் தேர்தல் முடிவுகள் நாடு தழு விய அளவில் மிக முக்கியமான திருப்ப மாகப் பார்க்கப்படுகிறது. “அழிக்க முடியாத முத்திரையை இந்தத் தேர்தல் பதிக்கும். தங்களுக்கான பல்கலைக்கழகங்களை மாணவர்கள் உருவாக்குவார்கள். இவ்வ ளவு நாட்கள் அவர்கள் கண்ட கனவைப் பிரதி பலிக்கும் வகையில் அது அமையும்” என்று இளம் கம்யூனிஸ்டுகள் அமைப்பின் மத்தியக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

 

;