ஐஐடி மாணவர் தற்கொலை: பேராசிரியர் பணியிடை நீக்கம்
சென்னை, நவ.28- சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை தொடர்பான புகாரை அடுத்து பேராசிரியர் ஆஷிஷ் குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலைக்கு பேராசிரி யர் ஆதித்யா சென் தான் காரணம் என்று மாணவர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் அந்த குழு நடத்திய விசாரணையின் அடிப்படை யில் பேராசிரியர் ஆஷிஷ் குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
செல்வகணபதியின் சிறை தண்டனை ரத்து
சுடுகாடு கூரை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வ கணபதிக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட் டுள்ளது.
சுடுகாட்டு கொட்டகை முறை கேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆச்சார்யலு, சத்தியமூர்த்திக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 2014 சென்னை சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செல்வகணபதி மேல்முறை யீடு செய்திருந்தார். மேல்முறை யீட்டு வழக்கில் தண்டனையை ரத்து செய்த நீதிபதி ெஜயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் வடிவேல் காலமானார்
சென்னை,நவ.28- அதிமுக முன்னாள் அமைச்சர் வடி வேல் காலமானார். அவருக்கு வயது 86. அவரது உடல், திருப்பத் தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சம்பந்தி குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட் டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஜெயல லிதா தலைமையிலான அமைச் சரவையில் ஊரக தொழில்துறை அமைச்சர் பதவி வகித்தவர் வடி வேலு. இவர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!
சென்னை, நவ.28- தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி யில் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், தாழ்வு மண்டலம் வலுப் பெற்று டிச. 1 இல் தென்கிழக்கு வங்கக் கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வும் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிக்கு புதன் முதல் 4 நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
மழை குறைவு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை நவ.28 காலை வரை இயல்பை விட 9 குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோ பர்.1 முதல் நவ.28 வரைக்கும் இயல் பாக 346 மி.மீ. பதிவாக வேண்டிய சூழலில் 316.3 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது.
குட்கா பதுக்கிய அதிமுக செயலாளர் கைது
சென்னை,நவ.28- தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்ப தற்கான பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கூட பள்ளி கல்லூரிகள் அருகே குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக 274 குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை தண்டை யார்பேட்டை பகுதியில் மாவா விற்பனை செய்த பாலசுப்பிரமணி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சந்திரசேகர் மற்றும் சிமி யோன் ஆகிய இருவர் வீட்டில் குட்கா, மாவா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை காவலர்கள் சந்திரசேகர் மற்றும் சிமி யோன் ஆகிய இருவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது சந்திரசேகர் வீட்டில் மாவா தயாரிப் பதற்காக பதுக்கி வைத்திருந்த ஜர்தா 37 கிலோ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சிமியோன் வீட்டில் இருந்தும் மாவா, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சந்திரசேகர் அதிமுக 47 வது வட்டச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தடயவியல் தணிக்கை நிபுணர்களின் உதவியை பயன்படுத்தி கொள்ள அரசாணை
சென்னை,நவ.28- தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தடயவியல் தணிக்கை நிபுணர்களும், தொழில்நுட்ப தணிக்கை நிபுணர்களின் உதவியை பயன்படுத்தி கொள்ள புதிய அரசாணைக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித் துள்ளது. சமீபகாலமாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகள் அதிகரிக்க தொடங்கியது.
பல்லாயிரக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்று வருகிறது. இந்த மோசடியில் மென் பொருட்களை பயன்படுத்தி தொழில்நுட்ப ரீதியாக பல ஆவணங்களை கண்டறியவும், சொத்துக்களை கணக்கிடுவதற்கு, தடயவியல் தணிக்கை நிபுணர்களும், தொழில்நுட்ப தணிக்கை நிபுணர்க ளும் பயன்படுத்திக்கொள்ள ஒழுங்கு படுத்தப்படாத முதலீட்டு திட்ட தடைச் சட்டத்தில் புதிய விதிகளை அமல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை போல் தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரி வுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மோசடிகளை மென்பொருள் உதவியுடன் கண்டு பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் முகமைகள் இதுபோன்ற தணிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தமிழ்நாடு அரசு பொரு ளாதார குற்றப்பிரிவு காவல் துறையும் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.