world

ஆப்கன் : மனிதகுலம் சந்தித்திராத துயரம் அமெரிக்க ஆக்கிரமிப்பால் நேர்ந்த அவலம்

காபூல். டிச.3- இதுவரை வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய அவசர நிலையை ஆப்கானிஸ்தான் சந்தித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் மனிதநேய உதவிகளைச் செய்து கொண்டிருக்கும் அமைப்பினர் கூறியுள்ளனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட இடது சாரி ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அமெ ரிக்கா உருவாக்கிய தலிபான் அமைப்பு தற்போது ஆப்கானிஸ்தானில் அதிகாரத் தில் உள்ளது. தொடர்ந்து அந்நாட்டைத் தனது ஆக்கிரமிப்பில் வைத்திருந்தும் அமெரிக்காவால் அங்கு அமைதியை மீண்டும் கொண்டு வர முடியவில்லை. வேறு வழியின்றி, ஆப்கானிஸ்தானை விட்டு தனது ராணுவத்தை திரும்ப அழைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டது.

ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் தலி பானின் கட்டுப்பாட்டுக்குள் தற்போது வந்து விட்டது. அப்பாவி மக்கள் பெருந்துய ரத்தை சந்தித்து வருகிறார்கள். சில தன்னார்வ அமைப்புகள் மூலமாக எந்த அளவுக்கு உதவிகள் தேவைப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை ஆய்வு நடத்தி வரு கிறது. உடனடித் தேவைகளுக்கு உதவி செய்யும் வகையில் கடந்த ஏழு நாட்களில் ஆப்கானிஸ்தானில் 4 மாகாணங்களில் 2 லட்சத்து 80 மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கியிருக்கிறார்கள்.  வெறும் 4 மாகாணங்களிலேயே அவசர, அவசரமாக உதவி தேவைப்படுகிறவர்கள் இவ்வளவு பேர் உள்ள நிலையில், மொத்த முள்ள 34 மாகாணங்களில் பெரும் நெருக்கடியாக நிலைதான் இருக்கும் என்கிறார்கள் ஐ.நா. சபை அமைப்பினர்.  மேலும் 3 மாகாணங்களில் குளிர் காலத்திற்குத் தேவையான உடமைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கியிருக்கிறார்கள்.  பல மாகாணங்களில் இருந்து காபூலை நோக்கி வந்தவர்கள் மற்றும் வந்து கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கை யே ஆயிரக்கணக்கில் உள்ளது. இவர்க ளுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள் கவனம் செலுத்துகின்றன. பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். படாக்சன், பக்லான் மற்றும் குண்டுஸ் ஆகிய மாகாணங்களில் இவர்களுக்குத் தேவை யான உதவிகள் செய்வதற்கான முயற்சி கள் நடக்கின்றன.

2 கோடியே 40 லட்சம் பேர்

நிலைமை முன்னேறுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. வரும் ஆண்டில் 2 கோடியே 40 லட்சம் பேர் கடுமையான நெருக்க டியை சந்திப்பார்கள் என்றும், அவர்களு க்கு நிவாரண உதவிகள் செய்ய வேண்டி யிருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் வாழ்வு மேம்பாட்டுத் திட்ட அமைப்பின் ஆப்கானிஸ்தான் அலுவ லகம் தெரிவித்துள்ளது. இதைத்தான் மனித குலம் சந்தித்திராத துயரங்களில் ஒன்று என்று அவர்கள் வர்ணித்துள்ளார்கள்.
 

 

;