பெய்ஜிங், ஜன.13- திரைப்படத்தில் வரும் காட்சிகளை போல நிஜ வாழ்வில் செயற்கையாக சூரியன் ஒன்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கி அசத்தினர் சீன நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள். தற்போது அதை ஒளிர செய்து அசத்தியுள்ளனர். அதாவது சுத்தமான எனர்ஜி (Clean Energy) வேண்டி ‘The Experimental Advanced Super conducting Tokamak (EAST)’ இயந்திரம் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. இந்த ‘EAST’ இயந்தி ரம்தான் சீனாவின் செயற்கை சூரியன் என சொல்லப் படுகிறது. சீன அறிவியல் அகாதெமியில் (ASIPP) பிளாஸ்மா இயற்பியல் நிறுவனத்தில் ஆராய்ச்சியா ளரான காங் சியான்சு (Gong Xianzu) இந்த அறி விப்பை வெளியிட்டுள்ளார். 120 மில்லியன் டிகிரி செல்சியஸ் பிளாஸ்மா வெப்பநிலையை 101 வினாடிகளுக்கு அடைந்தோம். இப்போது பிளாஸ்மா வெப்பநிலையில் 1,056 வினாடிகளில் 70 மில்லியன் செல்சியஸில் இந்த இயந்திரம் இயங்கி உள்ளது. சூரியனைப் போன்ற அணுக்கரு இணைவை உரு வாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த EAST இயந்திரம் இயங்குகிறது. உலை இயங்கும் வெப்ப நிலை உண்மையானசூரியனை விட ஐந்து மடங்கு வெப்பம் அதிகமாகஇருந்தது. சீனாவின் இந்த முயற்சியானது அணுக்கரு இணைவு மூலம் தூய்மையான ஆற்றலில் புரட்சி ஏற்படுத்து வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஹைட்ரஜன் மற்றும் டியூட்டீரியம் வாயுக்களை எரிபொருளாகப் பயன்படுத்தி உண்மையான சூரியனில் நிகழும் அணுக்கரு இணைவை இது பிரதிபலிக்கிறது.