world

img

ஆளை மாற்றுவதல்ல மக்களின் தேவை; கொள்கை மாற்றமே அவசியம்!

லண்டன், ஜன.20- லண்டன் பிரதமர் குடியிருப்பில் இருக்கும் நபரை மாற்றி விட்டு, வேறு நபரை அமர வைப்பதை விட, ஏகபோக அதிகாரத்திற்கு சவால் விடும் மாற்றமே லட்சக்கணக்கான மக்களின் தேவை என்று பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி  புதிய செயற்குழு தேர்வு செய்யப்பட் டுள்ளது. அவர்களிடம் உரையாடு கையிலேயே கட்சியின் பொதுச் செய லாளர் ராபர்ட் கிரிப்த்ஸ் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இது பற்றி மேலும் பேசிய அவர், போரிஸ் ஜான்சன் பிரதமராக இருப்பதற்குத் தகுதி இல்லை என்பது உண்மை தான். ஆனால், லட்சக்கணக்கான மக்களுக்குத் தேவை அவரை அப்பொறுப்பிலிருந்து மாற்றிவிட்டு வேறொருவரை அதில் அமர்த்து வது என்பது இல்லை.  ஏகபோக அதிகாரத்தைப் பாது காப்பதுதான் தற்போதைய ஆட்சி யாளர்களின் நோக்கமாக இருக்கி றது.

அவர்களுக்கு மானியத்தை அள்ளி வீசுகிறார்கள். எதிர்க்கருத்து மற்றும் போராட்டங்களை நசுக்கு வதற்காக புதிய ஜனநாயக விரோத சட்டங்கள் கொண்டு வரப்படு கின்றன. இவற்றிற்கு எல்லாம் சவால்  விடக்கூடிய நிலைமை உருவாக வேண்டும் என்பதுதான் லட்சக்கணக் கான பிரிட்டன் மக்களின் தேவையாக இன்று இருக்கிறது என்றார். சமையல் எரிவாயு மற்றும் மின்சா ரத்திற்கான கட்டண உயர்வு மேலும் 20 லட்சம் குடும்பங்களை “எரி பொருள் வறுமை”யில் தள்ளிவிடும். ஒட்டுமொத்தமாக, பிரிட்டன் முழுவ தும் 60 லட்சம் குடும்பங்கள் இந்த இரண்டு அத்தியாவசியத் தேவைக ளையும் வாங்க முடியாத அவல நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இந்த அவலநிலை ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் பிரிட்டனின் ஐந்து பகாசுர எரிபொருள் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார் கள். சென்ட்ரிகா-பிரிட்டிஷ் எரிவாயு நிறுவனம், முதல் ஆறு மாதங்களி லேயே தனது வருமானத்தை இரட்டிப் பாக்கி விட்டது என்று கிரிப்த்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். விலைகளின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. எரிபொருள் துறையை மீண்டும் அரசின் வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, அதுவரையில் பகாசுர நிறுவ னங்களின் கொள்ளை லாபம் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. வேலை, ஊதியம் மற்றும் பொதுச் சேவைகள் கோரி நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களில் முழுமையாகக் கலந்து கொள்ளப் போவதாகவும் கட்சி அறிவித்தி ருக்கிறது.

;