world

img

பொருளாதார பயங்கரவாதத்தை நிறுத்துங்கள் : சிரியா முறையீடு

நியூயார்க், ஜன.25- தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா சுமத்தியுள்ள தடைகள் பொருளாதார பயங்கரவாதம் என்றும் சிரிய மக்க ளின் மனித உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருக்கிறது என்றும் சிரியா குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நியூ யார்க் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் உரையாற்றுகையில்தான் சிரி யாவின் வெளியுறவுத்துறை துணை யமைச்சர் பஷர் அல் ஜாப்ரி இவ்வாறு குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் பேசிய அவர், கடுமையான பாதிப்பு களை பொருளாதாரத் தடைகள் ஏற் படுத்தியுள்ளன. சிரிய மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படு கின்றன. வாழ்வதற்கான உரிமையை மக்கள் இழந்து நிற்கிறார்கள் என்று குறிப்பிட்டார். பயங்கரவாதிகளை எதிர்ப்பதாகச் சொல்லி சிரியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஆக்கிரமித்துள்ளன. இங்குள்ள எண்ணெய் வளத்தைக் குறிவைத்தே அந்த நாடுகள் தங்கள் படைகளை அங்கு நிறுத்தியிருக்கின் றன.

அமெரிக்கப் படைகள் எண்ணெய் கடத்துவதை பிரதான பணியாகச் செய்து வருகின்றன என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகியுள்ளன. சில நாட்களுக்கு முன்பாக ராணுவப் பாது காப்புடன் 80 எண்ணெய் லாரிகள் சிரி யாவிலிருந்து, வட இராக் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டன. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரப் பயங்கரவாத நடவடிக்கைகள் சிரிய மக்களின் சுகா தாரம், கல்வி மற்றும் அனைத்து வகை யான வளர்ச்சி நடவடிக்கைகளையும் பாதித்திருக்கின்றன என்று குறிப்பிட்ட பஷர் அல் ஜாப்ரி, சர்வதேசச் சட்டங்க ளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மதிப்பதேயில்லை.

சிரியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவாக இந்த நாடு கள் செயல்பட்டு வருகின்றன. மக்க ளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் கள் என்று கண்டனம் தெரிவித்தார். அவர் தனது பேச்சில் ஐக்கிய நாடு கள் சபையையும் விட்டு வைக்க வில்லை. இவ்வளவு சம்பவங்கள் நடந் தாலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள் இஸ்ரேல் போன்ற நாடுகளின் ஆக்கிரமிப்புகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதி ராக குரல் கொடுக்கவில்லை. மாறாக, அலட்சியம் காட்டுகின்றன. அத்தியாவ சியப் பொருட்கள் மக்களுக்குக் கிடைப்பதை பொருளாதாரத் தடைகள் தடுக்கின்றன. அமைதி காப்பதை விடுத்து, இவற்றைத் தடுத்து நிறுத்த ஐ.நா.சபை முன்வர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

;