world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அர்ஜெண்டினா ஜனாதிபதிக்கு எதிர்ப்பு 

அர்ஜெண்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே இஸ்ரேலின் இனப்படுகொலைகளை நியாயப்படுத்தியதை தொ டர்ந்து  அவருக்கு எதிர்ப்புகள் எழுந்து வரு கிறது. ஹமாஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. இதனை தொ டர்ந்து பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் அர் ஜெண்டினா ஜனாதிபதிக்கு மிகக் கடுமை யான எதிர்ப்புகளை தெரிவித்தது. மிலே ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாடு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜோர்டான் மன்னன்   பாலஸ்தீனர்களுக்கு துரோகம் 

நேட்டோ தலைமையகத்தை ஜோர்டான் தலைநகர் அம்மானில் அமைக்க அந்நாட்டு மன்னன் அப் துல்லா ஒப்புதல் கொடுத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய போரை இஸ் ரேல் தூண்டி வரும் நிலையில் இஸ்ரேலை பாதுகாக்கவும் பாலஸ்தீன ஆதரவு குழுக்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மீது  தாக்குதல் நடத்தவும் நேட்டோ ராணுவ அமைப்பு திட்ட மிட்டுள்ள நிலையில், அமெரிக்க ஏகாதி பத்திய கூட்டணிக்கு வாய்ப்பை உருவாக்கி உள்ளார் ஜோர்டான் மன்னன்.

மின்னல் வேகத்தில்  சீன உற்பத்தியாளர்கள் 

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடந்த போது எடுத்த புகைப்படம் பொறித்த  டி-ஷர்ட்டுகளை சில மணி நேரத்தில் சீன வணிகர்கள் விற்பனைக்கு கொண்டு வந்துள் ளனர். தாக்குதலில் தப்பித்த அவர் ஆதரவா ளர்களை நோக்கி கையை உயர்த்திய புகைப் படம் பிரபலமானது அந்த புகைப்படத்தை மின்னல் வேகத்தில் டி-ஷர்ட் உள்ளிட்ட ஆடை களில் அச்சடித்து கடைகளில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர் சீன உற்த்தியா ளர்கள்.