world

img

வளர்ச்சிக்கான முன்மொழிவுகளுடன் இடதுசாரிகள்!

பாரீஸ்,ஜூலை 10- பிரான்ஸ் புதிய மக்கள் முன்னணியின்  (இடது சாரிகள் கூட்டணியின்) முன்மொழிவுகள் மக்களின் வாழ்வாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தை யும் மீட்கும் வகையில் அமைந்துள்ளது. மக்ரோனின் மக்கள் விரோதப் போக்கு  மக்ரோனின் என்செம்பில் கட்சியின் 14 ஆண்டு கால ஆட்சியில் பணவீக்கம்  தீவிரமாக அதி கரித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவுக்கொள்கை யில் 80 சதவீத மக்கள் பாலஸ்தீனத்திற்கு அங்கீ காரம் கொடுக்க ஆதரவாக உள்ள நிலையில் மக்ரோன் அதற்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்.  அதேபோல நேட்டோ படைகளை உக்ரைனுக்கு அனுப்பி ரஷ்யாவுடன் போரை நடத்த மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் பிரான்ஸ் விவசாயிகளுக்கான மானியங்களை வெட்டியது. உணவுப்பொருட்கள் கட்டுக்கடங்காத விலை உயர்வு ஆகியவற்றால் உள் நாட்டுப் பொருளாதாரம் மக்ரோனின் கட்சி ஆட்சியில் எந்த முன்னேற்றமும் பெறவில்லை.இவை மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  இடதுசாரிகளின் மறு சீரமைப்புத் திட்டம்  இந்நிலையில்  4 லட்சத்து 32 ஆயிரம் டாலர்க ளுக்கு (3,61,13,037 ரூபாய்)   மேல் வருமானம் பெரும் அனைத்து கோடீஸ்வரர்களுக்கும் 90 சதவீத  வரி விதிக்க இடதுசாரிகள்  கூட்டணி முன்மொ ழிவை வைத்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வரிவருவாயில் சமூக மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.  மேலும் இக் கூட்டணி, குறைந்தபட்ச ஊதி யத்தை அதிகரிப்பது, விலைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது, ஓய்வூதிய வயதைக் குறைப்பது, பசுமை மாற்றம், பொதுத் துறைகளுக்கான முதலீடுகளை அதிகரிப்பது ஆகியவற்றை முன் மொழிந்துள்ளது. பிரான்சில் பொருளாதார சமத்துவமின்மை யை சரி செய்வதற்கும்,செல்வத்தை மறுபங்கீடு செய்வதற்கும்  ஒரு வழியாக இந்த நடவடிக்கைகள்  முன்வைக்கப்பட்டுள்ளன.  இடதுசாரிகள் கூட்டணி அதிக இடங்களை வெற்றி பெற்றிருந்தாலும்  யாரும் பெரும்பான்மை பெறாத நிலையில் ஜனாதிபதி மக்ரோன் இடது சாரிகள் ஆட்சி அமைத்து விடக்கூடாது என்பதற்காக அந்நாட்டு பிரதமர் கேப்ரியலை இடைக்கால பிரத மராக நீடிக்க அழுத்தம் கொடுத்து வருகிறார்.