world

img

பிலிப்பைன்ஸ் படுகொலைகள்

பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணி லாவிற்கு அருகே கலாபர் ஜான் பிராந்தியத்தில் 2021 மார்ச் 7-ல்  தொழிற்சங்க முன்னணி வீரர்கள், இடதுசாரி செயல் வீரர்கள் மற்றும் சுற்றுப்புற சூழல் காப்போர் 9 பேரை பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது.  தடைசெய்யப்பட்ட பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு டையவர்கள் இவர்கள். ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். 9 பேர் தேடப்படு கின்றனர். இத்தாக்குதல் (Bloody Sunday) போலீசின் சட்டவிரோத கொலைகள் என அறியப்படுகிறது. பிலிப்பைன்சின் ஜனாதிபதியாக ரோட்ரிகோ டுடெர்டே உள்ளார். ஐநா சபையின் மனித உரிமை குறித்த நான்கு பதிவாளர்கள் மேற்கண்ட சம்ப வம் குறித்து அரசு என்ன விசாரணை களை மேற்கொண்டது என ஜனாதி பதிக்கு கடிதம் எழுதினர். பலமுறை எழுதியும் பதில் வராததால் பகிரங்க மாக கடிதத்தை வெளியிட்டனர். பயங்க ரவாத எதிர்ப்புச் சட்டம் என்பதன் பெய ரால் பிலிப்பைன்ஸ் அரசு இத்தகைய படுகொலைகளை நிகழ்த்தியது. ஐ.நா பதிவாளர் அறிக்கை 2021 அக்டோப ரில் வெளியிடப்பட்டது. 2021 டிசம்பரில் 17 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டது.  2016இல் டுடெர்டே ஜனாதிபதியான திலிருந்து மனித உரிமைகள் அப்பட்ட மாக பெருமளவிற்கு பிலிப்பைன்சில் மீறப்பட்டு வருகிறது. 2016 இதுவரை 400 செயல்வீரர்கள் கொல்லப்பட்டுள்ள தாக மனித உரிமை அமைப்புகள் குற் றம் சாட்டுகின்றன. போதை மருந்து கடத்துபவர் மீதான யுத்தம் என்பதன் பெயரால் இருபதாயிரம் பேர் கொல்லப் பட்டிருக்கலாம். இதுகுறித்து சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் விசாரித்து வரு கிறது. 

மீனவர்கள் தங்கள் உரிமை களுக்காக போராடுகின்றனர் .பெரிய சுரங்கம் அமைக்கும் திட்டங்களுக்கு எதிராக இவர்கள் போராடுகின்றனர். இதேபோல் பல்வேறு துறைகளிலும் கார்ப்பரேட்டுகளின் ஊடுருவலை எதிர்த்து பலரும் உயிரை பணயம் வைத்து தியாகம் செய்து போராடி வரு கின்றனர். இவ்வாறு போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை அரசு ஏவி வருகிறது. சர்வதேச கிரிமினல் நீதி மன்றம் தலையிட்ட விஷயங்களில் அரசே விசாரித்து வருவதால், சர்வதேச நீதிமன்றம் தலையிட வேண்டிய தில்லை என்ற நிலைபாட்டை அரசு எடுத் துள்ளது. 2022- ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. பிலிப்பைன்ஸ் சட்டப்படி ஒருவர் ஆறாண்டு காலம் ஒரு முறை மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியும். டுடெர்டேவின் மகன் பெர்டினான்ட் மார்க்கோஸ், தந்தை யின் ஆட்சியில் நடக்கும் அடக்குமுறை செயல்களுக்கு பின்புலமாக இருந்து வருகிறார். டுடெர்டே தனது மகளை ஜனாதிபதிக்கு போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் மனித உரிமைப் போராளிகள் ஜனநாயகம் நீதி நிலைநாட்ட தேர்த லில் போராடுவார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் நீதி ஜனநாயகம் திரும்பட்டும்! அடக்குமுறைகள் அழியட்டும்!

;